வர்த்தகம்

ராம்கோ சிமெண்ட்ஸ் அரியலூர் ஆலைக்கு தேசிய சமூக நல சாதனை விருது

சென்னை, அக்.17

ராம்கோ குரூப் அங்கமான ராம்கோ சிமெண்ட்ஸ், அரியலூர் சிமெண்ட் ஆலைக்கு உலக சமூக நல தினத்தையொட்டி சமூக நல சாதனை விருது வழங்கப்பட்டது. இந்த தொழிற்சாலை மட்டுமின்றி இதை சூழ்ந்துள்ள கிராமங்களுக்கு பல்வேறு சமூக நல திட்டங்களை ராம்கோ சிமெண்ட்ஸ் வழங்கியது.

கொரோனா காரணமாக மார்ச் 22 ந் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல் ராம்கோ சமூக நல திட்டங்களை செயல்படுத்த துவங்கியது. இதன் சேர்மன் வெங்கட்ராமராஜா, தலைமை எக்சிகியூடிவ் அதிகாரி ஏ.வி.தர்மகிருஷ்ணன் பல்வேறு நல திட்ட நடவடிக்கைகளை எடுத்தனர்.

ராம்கோ சார்பில் தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.2.5 கோடி, ஆந்திர மாநிலத்துக்கு ரூ.2.5 கோடி, ஒடிசா மாநிலத்துக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள மருத்துவ சாதனங்கள், கேரளா மாநிலத்துக்கு ரூ.70 லட்சம் மதிப்புள்ள மானிட்டர், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனர் என வழங்கப்பட்டது. பாண்டிச்சேரி மாநிலத்துக்கு 550 பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்பட்டது.

காவல் துறை, வருவாய் துறை, மாநில அரசு அதிகாரிகளுக்கு பாதுகாப்புக்கு ரூ. 3 கோடி மதிப்புள்ள மருத்துவ சாதனம், மானிட்டர், பாதுகாப்பு கவசம், மாஸ்க் போன்றவற்றை ராம்கோ வழங்க ஏற்பாடு செய்தது.

கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாக்க மொத்தமாக ராம்கோ ரூ.11 கோடியை இதுவரை செலவழித்துள்ளது. மருத்துவ சாதனங்களை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கியது.

ராம்கோ சிமெண்ட்ஸ் தொழிற்சாலை மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை, சரக்கு வாகனங்களுக்கு சானிடைசர் ஸ்பிரே போன்றவற்றை கடைப்பிடித்து வருகிறது.

அருகாமையில் உள்ள கிராம மக்களுக்கு பல சரக்கு, அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. 6 ஆயிரம் சார்பு ஊழியர்களுக்கு உணவு, தங்குமிடம் வழங்கப்பட்டது.

இதன் ஆலைகளில் தொற்று சிகிச்சை எடுத்தவர்கள் தங்குவதற்கு தனி பிரிவு செயல்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *