செய்திகள்

பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வரும் 50 சாதனை மகளிருக்கு ‘ஊருணி’ அறக்கட்டளை விருது

Spread the love

சென்னை, மார்ச் 3–

ஊருணி அறக்கட்டளை சார்பில் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து சாதனை படைத்து வரும் 50 மகளிருக்கு தீயணைப்புத்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு விருது வழங்கினார்.

மகளிர் மேம்பாட்டுக்கு பாடுபடும் தொண்டு நிறுவனமான ஊருணி அறக்கட்டளை சாதனை மகளிருக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி கவுரவிக்கிறது. மகளிருக்கு கல்வி, சம வேலை வாய்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு வழங்குதலில் ‘ஊருணி’ சிறந்து விளங்குகிறது என்று இதன் தலைவர் ரத்னவேல் ராஜன் தெரிவித்தார்.

விருது விழாவில் நடிகை ஹரிப் பிரியாவின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. சங்கர் சுந்தரலிங்கம் நன்றி தெரிவித்தார்.

பீனிக்ஸ் என மீண்டு எழுந்த மகளிர் விருது பிரிவில் ஷாமளா நாடேன்லாவுக்கு விருது வழங்கப்பட்டது.

வேலை வாய்ப்பு துறையில் சர்வீஸ் மற்றும் சில்லறை விற்பனை பிரிவில் எஸ்.கலைவாணி மற்றும் சாந்தி பிரியா சிவா ஆகியோர் விருது பெற்றனர்.

சொந்த தொழில் துவங்கிய ஷோபனா கங்கையா, மிருதுளா மணியன், விவசாயத் துறை ஜே.மோகனஸ்வரி கல்வி துறையில் சிறந்து விளங்கும் பவித்ரா ஆர், அரசு பொதுத்துறை பரிவு சண்முகப் பிரியா, ஸ்ரீதர் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.

சங்கரி தனசேகரனுக்கு சூப்பர் மகளிர் தலைவி விருது, மாற்று சிந்தனை சாதனையாளர் பிரிவில் பி.ஜெயந்தி, கே.பவித்ரா, இந்து ஆலயமணி, உம்முல் கைர், ரேணுகா ராமச்சந்திரா, சுவர்ணலதா, எஸ்.பிரீத்தா, டி.அனிதா, உமா மகேஸ்வரி மணி, வி.கிருஷ்ணகுமார் ஆகியோருக்கும், வெற்றியை தொட்ட ‘ராக’ ஸ்டார் விருது புவனேஸ்வரி, திவ்யா ருதி ஸ்ரீதரன், சுபா சக்தி, முத்து லட்சுமி, திவ்யா பிரீதி வெங்கட், எமல்டா குயின்மேரி, கார்திகா விஜய், திலகவதி மணி, அமுதா ரூபி ஆகியோருக்கும் விருது வழங்கப்பட்டது.

பீனிக்ஸ் வழிகாட்டிய மகளிர் விருது விஜிலா ஜாய்மின, ஜனனி கந்தசாமி, பூர்ணிமாரவி, மகளிருக்கு வேலைவாய்ப்பு அளிக்கம் சல்காம்ப் கார்ப்பரேஷன், சண்முக பிரியா, தீபலட்சுமி, லலிதா ராஜா, சூரிய பிரபா கார்த்திக், சுஜாதா, ஆகியோருக்கும்,

வழிகாட்டி மற்றும் தகுதி தலைவர் பிரிவில் சபருனிசா, சந்திரகலா, ரம்யா நிர்மல், அவதார் கேபிடல் டிரஸ்ட், சாய் பிரியா, உமா தேவி, நிர்மலா, ஷர்மிலா, வசுமதி வசந்தி ஆகியோருக்கும் விருது வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *