வர்த்தகம்

உற்பத்தித்துறை சவால்களை வென்று பஸ், லாரி, சரக்கு வேன்களும் வளர்ச்சி அடையும்

சென்னை, ஜன.12-

இந்தியாவில் வணிக வாகனங்களை பஸ், லாரி போன்றவை கொரானா வைரஸ் பாதிப்பு, கடுமையான மாசுக்கட்டுப்பாடு, ‘பிஎஸ் 6′ தரம் அறிமுகம், நவீன தொழில்நுட்பத்தை ஏற்று அமல்படுத்துவது, மூலப்பொருள் விலை உயர்வால் வாகன விலை அதிகரிக்க வாய்ப்பு போன்றவற்றால் வாகனத்துறை கடும் சவால்களை சந்தித்தாலும், இவற்றை சமாளித்து மீண்டும் இந்தத் துறை சிறப்பாக செயல்படும் என்று நிறுவனத்தின் வணிக வாகன பிரிவு தலைவர் கிரிஷ் வாக் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் வாகனங்களையும் ஆன்லைனில் வாங்குவது, வீட்டு டெலிவரி போன்றவை ஊக்குவிக்கப்பட்டது. பஸ், லாரி, சரக்கு வேன், கட்டுமான புல்டோசர் போன்ற வாகனங்கள் தேவை தற்போது அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் போடப்பட்ட பிறகு தான் லாரி, சரக்கு வேன் விற்பனை அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார் அவர்.

வாகனங்களில் டிரைவருக்கு கூடுதல் நவீன வசதிகள், வாகன இருப்பிடம் பற்றிய தகவல்கள், வாகன செயல்பாடு நிலையை வீட்டிலிருந்தே அறிதல், போன்றவை மனித செயல்பாட்டை அதிகரிக்க உதவும் என்றார்.

பழைய வாகனங்களை ஒழித்து புதிய வாகனங்கள் மட்டும் சாலையில் ஓடும் மாசு கட்டுப்பாடு திட்டத்தை அமல்படுத்தினால், கூடுதல் வாகன விற்பனை உயரும்.

படிப்படியாக நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் நிலையில், பல்வேறு அடிப்படை ஆதார திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால் வணிக வாகனங்களுக்கு தேவை அதிகரிக்கும். 2025ம் ஆண்டுக்குள் ரூ.110 லட்சம் கோடி அளவுக்கு அடிப்படை திட்டத்தில் முதலீடு செய்யப்படும். வாகன உற்பத்தித் துறைக்கு நேரடி சலுகையாக ரூ.57 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட உள்ளதால் இந்திய வணிக வாகனத் துறைக்கு நம்பிக்கை அளிக்கிறது என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *