செய்திகள்

சீனாவில் மீண்டும் பரவும் அறிகுறிகளில்லா தொற்று

பெய்ஜிங், அக். 26-

சீனாவில் மீண்டும் அறிகுறிகளில்லா கொரோனா தொற்று பரவத் தொடங்கி உள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் உலகின் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அங்கிருந்து பரவத் தொடங்கி ஒட்டுமொத்த உலகையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொரோனா வைரஸ் கொண்டு வந்தது. இதிலிருந்து தத்தளித்து சில நாடுகள் மீண்டும் வந்த நிலையில் பல நாடுகள் தவித்து வருகின்றன. இதற்கெல்லாம் ஆரம்பப் புள்ளியாக இருந்த சீனாவில் நிலைமை கட்டுக்குள் வந்தது. ஆனால் கடந்த சில மாதங்களில் நிலை வேறாக மாறியிருக்கிறது.

கடந்த ஞாயிறு அன்று அறிகுறிகள் அற்ற 137 கொரோனா நோயாளிகள் கண்டறியப் பட்டுள்ளதாகஸின்ஜியாங் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக கஷ்கர் ஏரியாவின் கார்மெண்ட் பேக்டரியில் பணிபுரிந்து வந்த 17 வயதான இளம்பெண்ணிற்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவருக்கு எப்படி கொரோனா பாதிப்பு வந்தது என்று தெரியவில்லை. இவரிடம் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு தொற்று பரவியிருக்கிறது.

மேலும் கடந்த 7 மாதங்களில் முதல் முறையாக அறிகுறிகளே இல்லாமல் அதிகப்படியான நபர்களுக்கு கோவிட்-19 தொற்று சீனாவில் கண்டறியப்பட்டுள்ளது. இது வடக்கு ஸின்ஜியாங் பகுதியில் இருந்து பரவியிருக்கும் என்று கூறப்படுகிறது. சீன தேசிய சுகாதாரத்துறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, புதிதாக 20 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 161 பேருக்கு அறிகுறிகளே இல்லாமல் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 31ஆம் தேதிக்கு பிறகு தற்போது தான் அறிகுறிகளே இல்லாமல் பலருக்கும் சீனாவில் வைரஸ் தொற்று பரவி வருகிறது. அதேசமயம் மெயின்லாண்ட் சீனாவில் கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பிறகு கோவிட்-19 தொற்று பெரிதும் குறைந்துள்ளது. இங்கு இதுவரை 85,810 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை 4,634ஆக பதிவாகியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *