வாழ்வியல்

விண்வெளி ஆய்வு நிலையத்தில் சுடப்பட்ட பல்வேறு பலகாரங்கள்!

பாட்டி நிலவில் வடை சுடுகிறார் என்று கூறுவதைக் கட்டுக்கதை என்று ஒதுக்கினோம். ஆனால் அது உண்மையாகும் காலம் வெகு தொலைவில் இல்லை.

அனைத்துலக விண்வெளி ஆய்வு நிலையத்தில் முதல்முறையாகப் பலகாரங்களைச் சுட்டெடுத்துள்ளனர் விண்வெளி வீரர்கள் சிலர். குக்கீஸ் எனப்படும் பலகாரங்களைச் சுட்டெடுக்கச் சுமார் மூன்று மணிநேரம் எடுத்தது. சராசரியாகப் பூமியில் அதைச் சுட 20 நிமிடங்களே எடுக்கும். பலகாரங்களைச் சுட்ட அடுப்பு, புவியீர்ப்பு சக்தி இல்லாத இடத்தில் இயங்க வடிவமைக்கப்பட்டது.

பலகாரங்களைச் சுடும் போது, அவைப் பார்க்க அழகாக, மணமாக இருந்தன என்றனர் சோதனையில் ஈடுபட்ட விண்வெளி வீரர்கள். ஆனால் அவற்றைச் சாப்பிட்டுப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டவில்லை அவர்களுக்கு. விண்வெளியில் சுடப்பட்ட பலகாரங்கள் ஸ்பேஸ்–எக்ஸ் விண்கலம் மூலமாகப் பூமிக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. அவை உண்பதற்கு உகந்தவையா என்று முதலில் சோதிக்கப்படும். விண்வெளிப் பயணத்தை மேலும் சௌகர்யமானதாக மாற்றியமைக்க புதுவித அடுப்புகளைப் போன்ற கண்டுபிடிப்புகள் உதவும் என்று நம்பப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *