செய்திகள்

பள்ளிக்கு வரும் மாணவிகளுக்கு தினந்தோறும் ரூ.100 ஊக்கத் தொகை

திஸ்பூர், ஜன. 5-

அசாமில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், பள்ளிக்கு வரும் மாணவிகளுக்கு தினமும் 100 ரூபாய் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து அசாம் கல்வி அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறுகையில், பெண் கல்வியை மேம்படுத்துவதற்கான ஒரு வகையான முன் முயற்சியாக, பள்ளிக்கு வரும் ஒவ்வொரு மாணவிக்கும் ஒரு நாளைக்கு 100 ரூபாய் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். 12–ம் வகுப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறும் மாணவிகளுக்கு ஸ்கூட்டர்களை மாநில அரசு வழங்கும் என்றும் அவர் கூறினார்.

இதற்காக மாநில அரசு ரூ.144.30 கோடியை செலவிடும் என தெரிவித்தார். இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டினாலும், முதல் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மாநில அரசு ஸ்கூட்டர்களை வழங்கும் என்று அவர் கூறினார்.

நடப்பு மாத இறுதிக்குள் ஒரு நாளைக்கு 100 ரூபாய் திட்டம் தொடங்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *