செய்திகள்

ஓவியம், இசை, ரோபோ வடிவமைப்பு: மாணவர்களிடம் திறமைகளை கண்டறிந்து பயிற்சி அளிக்கும் கிட்ஸ் சவுபால் அமைப்பு

Spread the love

சென்னை, பிப்.1–

ஓவியம், இசை, ரோபோ வடிவமைப்பில் ஈடுபட மாணவர்களிடம் உள்ள திறமைகளை கண்டறிந்து கிட்ஸ் சவுபால் அமைப்பு பயிற்சி அளிக்கிறது.

கிட்ஸ் சவுபால் நிறுவனம் குழந்தைகளின் திறன் சார்ந்த கல்வி கற்பித்தலுக்கும், அவர்களின் தனித்த ஆர்வத்தை கண்டறியவும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இப்போதிருக்கக் கூடிய கல்வி சார்ந்த வேலைவாய்ப்புகள் என்பது எதிர்காலத்தில் அருகி விடக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, திறன் சார்ந்த கற்றல் மற்றும் அதனை புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு கற்பது என்பது மிகச்சிறந்த வேலைவாய்ப்புகளை தேடித் தரும். இதன்மூலம் நமது குழந்தைகள் ரோபோ நிபுணத்துவம் பெற்ற குழந்தையாகவும், ஓவியம், இசை போன்றவற்றில் திறன் பெற்றதாகவும் வர முடியும்.

கிட்ஸ் சவுபால் இரண்டு செல்லிடப்பேசி செயலி அம்சங்களைக் கொண்டிருக்கிறது. ஒன்று குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கானது. மற்றொன்று ஆசிரியர்கள், பயிற்சியாளர்களுக்கானது. பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் இணைப்பதற்கு மட்டுமின்றி குழந்தைகள் தொடர்பான பயிலரங்குகள், முக்கிய நிகழ்வுகள் குறித்த விவரங்களையும் அறிந்து கொள்ள முடியும். கிட்ஸ் சவுபால் பார்ட்னர் செயலியானது ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பயிற்சியாளர்கள் ஆகியோர் எளிதாக அதனைக் கையாளும் வகையிலும், அனைத்து விவரங்களையும் விரல் நுனியில் வைத்திருக்கவும் உதவி செய்கிறது.

கிட்ஸ் செளபால் ஆனது குழந்தைகளுக்காக ஊக்க உதவித் திட்டத்தையும், ஆசிரியர்களுக்கு பரிசு அளிக்கும் திட்டத்தையும் செயல்படுத்துகிறது. ஆற்றல் மிகுந்த குழந்தைகளுக்காக ரூ.10 லட்சம் மதிப்பிலான ஸ்காலர்ஷிப் திட்டத்தை கிட்ஸ் சவுபால் செயல்படுத்துகிறது. இது குழந்தைகளின் திறன்களை மேம்படுத்துவதற்கான அம்சங்களை ஊக்குவிக்கவே ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *