செய்திகள்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிதாக பிறந்த 2 புலிக்குட்டிகளை பார்க்க ஏற்பாடு

சென்னை, ஜன.14-

சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மொத்தம் 27 புலிகள் உள்ளன. அவற்றுள் ஆதித்யா மற்றும் ஆர்த்திக் என்று பெயரிடப்பட்ட புலிகளுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2 குட்டிகள் பிறந்தன. இந்த இரண்டு குட்டிகளும் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வந்தன.

தற்போது அந்த 2 குட்டிகளும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது.

இந்த நிலையில், வருகிற பொங்கல் விடுமுறை தினத்தையொட்டி, வண்டலூர் பூங்காவிற்கு வரும் பார்வையாளர்களுக்கு இந்த புலிக்குட்டிகளை பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு திரையின் மூலம் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் தை மாதத்தில் சிறப்பாக கிடைக்கும் கரும்பு, பூங்காவில் உள்ள யானைகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை பொங்கல் விடுமுறையில் பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் யானையின் இருப்பிடத்திற்கு சென்று காலை 11 மணியளவில் மற்றும் மதியம் 3 மணியளவில் காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *