செய்திகள்

பீனிக்ஸ், மெரீனா, வி.ஆர்.மால்களில் ஆப்பிள் சாதனங்கள் விற்பனைக்கு ஆப்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் ஷோரூம் துவக்கம்

Spread the love

சென்னை, 13 பிப். 14–

ஆப்பிள் நிறுவனத்தின் மிகப்பெரிய ப்ரீமியம் விற்பனை மையங்களில் ஒன்றாக முன்னிலை வகிக்கும் ஆப்ட்ரானிக்ஸ் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் ஆறு புதிய விற்பனை மையங்களை நிறுவி உள்ளது. ஆப்ட்ரானிக்ஸ் நிறுவனர் சுதிந்தர் சிங் மற்றும் ஆப்ட்ரானிக்ஸ் இயக்குனர் மேக்னா சிங் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தனர்.

ஆப்ட்ரானிக்ஸின் அனைத்து விற்பனை மையங்களிலும், வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட அனுபவத்தை அளிக்கும் வகையில் அனைத்து ஆப்பிள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் சிறப்புப் பயிற்சி பெற்ற விற்பனையாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிப்புரிந்து வருகின்றனர். என்று ஆப்ட்ரானிக்ஸ் நிறுவனர் சுதிந்தர் சிங் தெரிவித்தார்.

சென்னையில் ஆப்பிள் ப்ரீமியம் ஸ்டோர்களை அம்பத்தூர், அண்ணா நகர், வி.ஆர். மால், வேளச்சேரி பீனிக்ஸ் மால், மெரீனா மால் மற்றும் காதர் நவாஸ்கான் சாலை ஆகிய பகுதிகளில் இந்த ஷோரூம்கள் நிறுவப்பட்டுள்ளது என்றார்.

ஆப்ட்ரானிக்ஸ் இயக்குனர் மேக்னா சிங் பேசுகையில், ஆப்ட்ரானிக்ஸின் விற்பனை மையங்கள் வங்கிகளுடனான கூட்டு ஒப்பந்தங்கள், ஆப்பிள் வாடிக்கையாளர்களின் சேவைகளுக்கான பிரத்யேக கிளப் ஆப்ட்ரானிக்ஸ் உறுப்பினர் அட்டை ஆகியவற்றையும் வழங்கி வருகின்றன. மேலும், இந்த உறுப்பினர் அட்டையானது இலவச காப்பீடு வசதி கொண்டது என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *