செய்திகள்

தொழிலாளர் மேலாண்மை எம்.ஏ., படிப்புக்கு 23–ந் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை, அக். 18

தொழிலாளர் மேலாண்மை எம்.ஏ., படிப்புக்கு மாணவர்கள், இம்மாதம் 23 ந் தேதி மாலை 4 வரை விண்ணப்பிக்கலாம்.

சென்னை – தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்ட படிப்பு, எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்டமேற்படிப்பு மற்றும் பிஜி.டி.எல்.ஏ (தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை மாலை நேர பட்டயப்படிப்பு), டி.எல்.எல். ஏ.எல். (தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும், வார இறுதி) பட்டய படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) படிப்புகள் சென்னை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பி.ஜி.டி.எல்.ஏ. மற்றும் டி.எல்.எல். ஏ.எல். படிப்புகள் தமிழக அரசின் அங்கீ காரத்துடன் நடைபெற்று வருகிறது.

பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ (தொழிலாளர் மேலாண்மை), பி.ஜி.டி.எல்.ஏ மற்றும் டி.எல்.எல். ஏ.எல். ஆகிய பட்ட, பட்ட மேற்படிப்பு, பட்டய படிப்புகள் தொழிலாளர் நல அலுவலர் பதவிக்கு பிரத்யேக கல்வித்தகுதியாக தமிழ்நாடு தொழிற்சாலைகள் தொழிலாளர் நல அலுவலர்கள் விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ளது.

இக்கல்வி நிலையத்தில் பயின்ற மாணவர்கள் மனிதவளத் துறையில் பல்வேறு தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகிறார்கள். மேலும், தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறையில் தொழிலாளர் அலுவலர் (தற்போது தொழிலாளர் உதவி ஆணையர்) மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வர் பதவிகளுக்கு பி.ஏ (தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ (தொழிலாளர் மேலாண்மை) மற்றும் பி.ஜி.டி.எல்.ஏ பட்ட, பட்ட மேற்படிப்பு, பட்டய படிப்பு தகுதியாக நிர்ணயம் செய்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) முதுநிலை பட்டபடிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு முடிவுற்ற நிலையில், பல பெற்றோர்களிடமிருந்து மேற்கண்ட படிப்பிற்கு விண்ணப்பிக்கும் நாள் காலக்கெடுவை நீட்டிக்குமாறு கோரிக்கைகள் வந்ததாலும், மேற்கண்ட படிப்பிற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 23 ந் தேதி மாலை 4 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம் (நேரில்) – ரூ.200,

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு -விண்ணப்ப கட்டணம் ரூ.100 (சாதி சான்றிதழ் நகல் தாக்கல் செய்யவேண்டும்). பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் – 23 ந் தேதி.

தபாலில் பெற விரும்புவோர் விண்ணப்ப கட்டணம் + தபால் கட்டணமாக ரூ.50 – கூடுதலாக அனுப்ப வேண்டும். வங்கி வரைவோலை ‘The Director, Tamilnadu Institute of Labour Studies, Chennai – 5″ என்ற பெயருக்கு எடுத்து அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு ஒருங்கிணைப்பாளர் (சேர்க்கை) இரா.ரமேஷ்குமார், தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம், காமராசர் சாலை, சென்னை – என்ற முகவரியில் தொலைபேசி 9884159410, 044-28 440102, 28445778 தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *