பிரபல சாப்ட்வேர் நிறுவனமா மெகா சாப்ட் நிறுவனத்தை ரவீந்திரா சன்னாரெட்டி நிறுவினார். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் 21ந் தேதி இதன் நிறுவனர் பிரிவிலிருந்து விலகியதால், இவரது பங்குகளை நிர்வாகிகள் அல்லாத பொதுமக்கள் பிரிவில் ஒதுக்க வேண்டும் என மும்பை பங்கு சந்தை, தேசிய பங்கு சந்தையில் கோரியிருந்தார். தற்போது அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் பங்குகள் பொது பிரிவுக்கு மாற்றப்பட்டது. ஜீயஸ் நிறுவனம் மெகா சாப்ட்டுடன் இணைந்து பிறகு நிர்வாகத்தில் இந்த மாற்றம் ஏற்பட்டது.
சென்னை, ஜன.2– ஆழ்வார்பேட்டையில் உள்ள சங்கரா அரங்கில் ருத்ராட்சம் முதல் மரகதம், மாணிக்கம் போன்ற விலை உயர்ந்த கற்களால் ஆன சுவாமி சிலைகள் வரையிலான ஆன்மிக சம்பந்தப்பட்ட பொருட்களின் விற்பனை கண்காட்சி சிவாம்சம் என்ற பெயரில் நடக்கிறது. இந்த கண்காட்சியில் 21 முகங்கள் கொண்ட பல வகை ருத்ராட்சம் 1–14 முகங்களை கொண்ட ருத்ராட்சங்களால் ஆன சித்த மாலை 1–21 முகங்களை கொண்ட இந்திர மாலை, கணேஷ் துதிக்கை ருத்ராட்சம், தியானம் செய்ய ருத்ராட்ச பந்தல் போன்ற […]
சென்னை, பிப்.7 இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் அங்கமான கேம்பிரிட்ஜ் அசெஸ்மெண்ட் இங்கிலீஷ், இந்தியாவில் வேலைவாய்ப்பை எளிதாக்க மொபைல்போன் அடிப்படை யிலான ஆங்கிலத்தேர்வான UPSKILL ஐ அறிமுகம் செய்துள்ளது. மாணவர்களும், வேலை தேடுபவர்களும் அவர்களது தொடக்ககால வேலைவாய்ப்பு முயற்சிகளின்போது தங்களுடைய ஆங்கில மொழித்திறனை எளிதாக வெளிப்படுத்த இத்தேர்வு பெரிதும் உதவுகிறது என்று கேம்பிரிட்ஜ் இங்கிலீஷ்- தெற்காசிய மண்டல இயக்குனர் டி.கே அருணாச்சலம் தெரிவித்தார். இந்தியாவில் ஆங்கிலமொழியைப் பயிற்றுவிக்கும் என் குரு இங்கிலீஷ் லேர்னிங் செயலி மூலம் கேம்பிரிட்ஜ் அசெஸ்மெண்ட் […]
சேர்மன் பி.ஆர். வெங்கட்ராம ராஜா, ஏ.வி. தர்மகிருஷ்ணன் தகவல் சென்னை, பிப். 5– ராம்கோ சிமெண்ட்ஸ் நடப்பு நிதியாண்டின் 3வது காலாண்டில் திறமையான நிதி நிர்வாகம், சிக்கன நடவடிக்கையால் ரூ.201.35 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது என்று இதன் சேர்மன் பி.ஆர். வெங்கட்ராம ராஜா, ஏ.வி. தர்மகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்தனர். ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரை காலாண்டில் செயல்பாடுகள் மூலம் ஒருங்கிணைந்த வகையில் ரூ.202.86 கோடி வருமானத்தை ஈட்டியுள்ளது. முந்தைய […]