செய்திகள்

நாகர்கோவிலில் அமித்ஷா 7ந்தேதி தேர்தல் பிரச்சாரம்

நாகர்கோவில், மார்ச்.4-

மத்திய அமைச்சர் அமித்ஷா 7-ந் தேதி நாகர்கோவிலில் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் அமித்ஷா விழுப்புரத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். தற்போது தமிழகத்தில் 2-வது கட்டமாக அவர் குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். இதற்காக வருகிற 7ந்தேதி ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் மறவன்குடியிருப்பு ஆயுதப்படை மைதானத்தில் வந்திறங்குகிறார். அங்கு அவருக்கு பாரதீய ஜனதா கட்சி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

பின்னர் அங்கிருந்து காரில் சுசீந்திரம் சென்று தாணுமாலயசாமியை தரிசனம் செய்கிறார். பின்னர் நாகர்கோவில் இந்துக்கல்லூரி அருகில் உள்ள நீலவேணி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து தேர்தல் பிரச்சார ரோடு ஷோ நிகழ்ச்சியை தொடங்குகிறார். நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பு பகுதியில் பாரதீய ஜனதா – அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து பேசுகிறார்.

தொடர்ந்து பொதுப்பணித்துறை அலுவலக சாலை வழியாக வேப்பமூடு சந்திப்பு பகுதிக்கு சென்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, உரையாற்றுகிறார். அதன்பிறகு வடசேரியில் உள்ள உடுப்பி இன்டர்நேஷனல் ஓட்டலில் நடைபெறும் பாரதீய ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகளை வழங்கி பேசுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *