செய்திகள்

14–ந்தேதி சென்னை வரும் அமித்ஷா: ரஜினியை சந்திக்க திட்டம்

சென்னை, ஜன. 4–

தமிழக சட்டமன்ற தேர்தல் களம் விறுவிறுப்பு அடைந்துள்ள சூழலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 14–ம்தேதி சென்னை வர உள்ளார்.

துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வரும் அமித்ஷா, நடிகர் ரஜினிகாந்திடம் உடல்நலம் குறித்து நேரில் விசாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

முதல்வர் வேட்பாளர் தொடர்பாக அண்ணா தி.மு.க. – பா.ஜ.க. இடையே ஒருமித்த கருத்துகள் இன்னும் வெளிவராத நிலையில் அமித்ஷாவின் சென்னை வருகை அரசியல் வட்டாரத்தில் முக்கியத்தும் பெற்றுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் அமித்ஷா சென்னை வருகை தந்த போதுதான் அண்ணா திமுக – பா.ஜ.க. இடையே சட்டமன்ற தேர்தலில் கூட்டணி என அறிவிக்கப்பட்டது. அமித் ஷா வருகையால் அண்ணா தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *