செய்திகள்

அமெரிக்க ஒமேகா ஹெல்த்கேர் விரிவாக்க திட்டம்: முதன்மை அதிகாரியாக சுமித் சத்தேவா நியமனம்

Spread the love

சென்னை, டிச. 4

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒமேகா ஹெல்த்கேர், தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, இதர முக்கிய நகரங்களில் மருத்துவ தொழில்நுட்ப நிறுவனமாக விளங்குகிறது.

இது நவீன டிஜிட்டல் தொழில்நுட்பம், மருந்து உற்பத்தி விரிவாக்கம் செய்ய, இந்த துறையில் அனுபவம் உள்ள சுமித் சச்தேவா முதன்மை வர்த்தக மேம்பாட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று இதன் தலைவர் அனுராக் மேத்தா தெரிவித்தார்.

இவர் காக்னிசன்ட், ஹெக்சோவர், காலிபர் சாப்ட்வேர் நிறுவனங்களில் முக்கிய பதவி வகித்துள்ளார். பணம் செலுத்துதல், மருத்துவ வசதி வழங்குதல், உயிரி மருந்து துறையில் இவர் 20 ஆண்டு அனுபவம் பெற்றவர்.

மருத்துவமனைகளுக்கு நவீன ரோபோ சாதனங்கள், தானியங்கி செயல்பாடு கருவிகளை ஒமேகா ஹெல்த் கேர் சப்ளை செய்து, பராமரிப்பு பணிகளை மேற்கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *