வர்த்தகம்

ஏழைகளுக்கு குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கும் எஸ்.ஆர்.எம். மருத்துவமனைக்கு புதிய ஆம்புலன்ஸ்

ஏழைகளுக்கு குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கும் எஸ்.ஆர்.எம். மருத்துவமனைக்கு புதிய ஆம்புலன்ஸ்

‘ஆம்ப்னெல்’ நிறுவனம் நன்கொடை

சென்னை, செப். 22

ஏழைகளுக்கு குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கும் காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மறைமலை நகரில் இயங்கி வரும் ஆம்ப்னெல் ஆம்னிகனெக்ட் நிறுவனம் புதிய தலைமுறை அறக்கட்டளையுடன் இணைந்து புதிய ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றை இலவசமாக வழங்கி உள்ளது. இதனை அந்த நிறுவனத்தின் முதுநிலை மேலாளர் கே.கவிதா கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் அமெரிக்க வர்த்தக சபை மண்டல இயக்குனர் அவ்பிரே டேனியல்ஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு இணை துணைவேந்தர் லெப்டினன்ட் கர்னல் டாக்டர் ஏ.ரவிக்குமார், டீன் டாக்டர் ஏ.சுந்தரம் தலைமை வகித்தனர். மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் கே.தங்கராஜ் வரவேற்றார். முடிவில் புதிய தலைமுறை அறக்கட்டளை செயலாளர் டி.வி.வெங்கடகிரி நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *