வர்த்தகம்

ஹங்கமா பாடல்களை அமேசான் ‘அலெக்சா’ மூலம் கேட்க ஏற்பாடு

சென்னை, அக்.15

உங்களுக்கு பிடித்தமான 1.5 கோடி ஹங்கமா பாடல்களை, அமேசான் ‘அலெக்சா’மூலம் கேட்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 20க்கும் அதிகமான இந்திய மற்றும் பன்னாட்டு மொழிகளில் மொத்தம் 1.5 கோடிக்கு கூடுதலான பாடல்களை அமேசான் இந்தியா ஷாப்பர்கள் பெறலாம்.

முழு ஆல்பத்தின் தனிப்பட்ட டிராக்குகள் அல்லது பாடல்கள் அல்லது குறிப்பிட்ட கலைஞரின் அல்லது குறிப்பிட்ட வகை பாடல்களை தேர்ந்தெடுத்துக் கேட்டும் ரசிக்கலாம். மேலும் இசை அமைப்பாளர்கள், பாடகர்கள், குறிப்பிட்ட நிகழ்வுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஹங்கமா மியூசிக் உருவாக்கிய பாடல் லிஸ்ட் அலெக்சாவில் கேட்டுக் கொள்ளலாம்.

ஹங்கமா மியூசிக் பாடல்களை கேட்கப் பயனீட்டாளர்கள் அமேசான் இந்தியா செயலியிலுள்ள அலெக்சா டேப் (மைக்ரோ போன் ஐகான்) கிளிக் செய்தால் போதும். ஒலி ஆணைகளைத் தந்து ஹங்கமா இசை நூலக இணைப்பை பெறலாம் என்று ஹங்கமா டிஜிட்டல் மீடியா சிஓஓ சித்தார்த்தராய் தெரிவித்தார்.

செல்போனில் உள்ள அமேசான் இந்தியா செயலியிலுள்ள அலெக்சா மைக்ரோ போன் படத்தை கிளிக் செய்து ஒலி ஆணைகளை பயன்படுத்தி உங்களுக்கு பிடித்தமான பாடல்களை ஹங்கமா மியூசிக்கில் கேட்டு ரசிக்கலாம். மேலும் விவரங்களுக்கு www.hungama.org என்ற வலைதளத்தைப் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *