செய்திகள்

‘மேக் இன் இந்தியா’ பொருட்களை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்ய அமேசான் ரூ.71 ஆயிரம் கோடி முதலீடு

Spread the love

புதுடெல்லி, ஜன. 16

இந்தியாவின் ‘மேக் இன் இந்தியா’ பொருட்களை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்ய ரூ.70,830 கோடி முதலீடு செய்வதாக அமேசான் ஆன்லைன் நிறுவனத்தின் சிஇஓ ஜெப் பெசோஸ் தெரிவித்துள்ளார்.

உலக கோடீஸ்வரரும், பிரபல ஆன்லைன் விற்பனை நிறுவனமான அமேசானின் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜெப் பெசோஸ், 3 நாள் சுற்றப்பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லி, ராஜ்கோட்டில் உள்ள காந்தி நினைவிடத்திற்கு சென்ற அவர், மலர் தூவி மரியாதை செய்தார்.

பின்னர் அமேசான் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

உலகின் போக்கை மாற்றிய மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தியது, சிறப்பான தருணமாக இருந்தது. இந்த 21ம் நூற்றாண்டு, இந்திய நூற்றாண்டாக இருக்கும் என கணிக்கிறேன்.

சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கையில் அமேசான் நிறுவனம், ரூ.70,830 கோடி முதலீடு செய்ய உள்ளது. மேலும், 2025ம் ஆண்டில் இந்தியாவின் ‘மேக் இன் இந்தியா’ பொருட்களை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யும்.

இந்தியா, ஆற்றல், வளர்ச்சி, சுறுசுறுப்பு என தனித்துவமான சிறப்புமிக்க நாடு.

இந்தியாவின் ஜனநாயகமும் பெருமைப்படத்தக்கது. இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *