வாழ்வியல்

அவரைக்காயில் உள்ள வியக்கத்தக்க நன்மைகள்!

நாம் நமது வீடுகளில் தினமும் சமைக்கும் போது ஏதாவது ஒரு காய்கறியை சேர்த்து சமைப்பது உண்டு. இதில் அவரைக்காயில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம்.

மலசிக்கல்இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உள்ள பிரச்சினைகளில் ஒன்று மலச்சிக்கல். இது ஒரு சிலருக்கு வயிற்றில் உணவை செரிமானம் செய்வது பிரச்சினை ஏற்படும்போது, மலச்சிக்கல் உண்டாகிறது. இப்படிப்பட்டவர்கள் தினமும் உணவில் அவரைக்காய் பொரியல், கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால், பிரச்சனையில் இருந்து விடுதலை பெறலாம்.

உடல் எடைஇன்றைய இளம் தலைமுறையினரின் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று உடல் எடை. இளம் தலைமுறையினருக்கு என்று மட்டுமில்லாமல், முதுமையடைந்தவர்களும் கூட உடல் எடை அதிகரிப்பு, பல விதமான பாதிப்புகளில் கொண்டு போய் விடுகிறது.

இதனை சரிசெய்ய, உடலுக்கு தேவையான சத்துக்களை கொண்ட, கொழுப்பைக் கரைக்கக் கூடிய அவரைக்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்தால் உடல் எடை குறைந்துவிடும்.

நோய் எதிர்ப்பு சக்தி

நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத போது நம்மை பலவிதமான நோய்கள் அணுக கூடும். எனவே, உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்க, அவரைக்காயை உணவில் அதிகமாக சேர்த்துக் கொண்டாலே போதும். இதிலுள்ள சத்துக்கள் ரத்தத்தில் கலந்து அதில் இருக்கும் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துகிறது.

இதய நோய்

இன்று பிறந்த குழந்தை முதல், முதியவர் வரை அனைவருக்குமே இதயநோய் ஏற்படுவது இயல்பாக மாறியுள்ளது. இதற்கு காரணம், நமது உணவுகளில் சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளாததுதான். இதய நோய் பிரச்சனை உள்ளவர்கள், இயற்கையான உணவுகளான பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்வது அவசியம்.

உணவில் அவரைக்காயை சேர்த்துக் கொள்ளும் போது, உடலில் இதயத்திற்கு தேவையான ரத்தத்தைக் கொண்டு செல்லும் நரம்புகளில் இறுக்கம் ஏற்படுவதை தடுத்து, மாரடைப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதிலிருந்து பாதுகாக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *