செய்திகள்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யும் பணி

கடலூர் மாவட்டத்தில்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யும் பணி

கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி துவக்கினார்

கடலூர், மார்ச் 10–

கடலூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யும் பணியை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி நடைபெற்றது.

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி முறையில் சட்டமன்ற தொகுதி வாரியாக பிரித்து ஒதுக்கீடு செய்யும் பணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் 305 வாக்குச்சாவடி மையங்களும், விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் 355 வாக்குச்சாவடி மையங்களும், நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் 299 வாக்குச்சாவடி மையங்களும், பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் 341 வாக்குச்சாவடி மையங்களும். கடலூர் சட்டமன்ற தொகுதியில் 343 வாக்குச்சாவடி மையங்களும், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் 336 வாக்குச்சாவடி மையங்களும், புவனகிரி சட்டமன்ற தொகுதியில் 350 வாக்குச்சாவடி மையங்களும், சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் 354 வாக்குச் சாவடி மையங்களும், காட்டுமன்னரர் கோயில் சட்டமன்ற தொகுதியில் 318 வாக்குச்சாவடி மையங்களும் என 3001 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக இன்று 9 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி முறையில் சட்டமன்ற தொகுதி வாரியாக பிரித்து ஒதுக்கீடு செய்யப்பட்டது. திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்கு 366 வாக்கு செலுத்தும் கருவிகள், 366 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 394 வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரங்கள், விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிக்கு 426 வாக்கு செலுத்தும் கருவிகள், 426 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 460 வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரங்கள்.

நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு 359 வாக்கு செலுத்தும் கருவிகள், 359 வாக்குப்பதிவு இயந்திரங்கள் , 386 வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரங்கள். பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்கு 410 வாக்கு செலுத்தும் கருவிகள், 410 வாக்குப்பதிவு இயந்திரங்கள் , 440 வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரங்கள். கடலூர் சட்டமன்ற தொகுதிக்கு 412 வாக்கு செலுத்தும் கருவிகள், 412 வாக்குப்பதிவு இயந்திரங்கள் , 443 வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரங்கள். குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு 404 வாக்கு செலுத்தும் கருவிகள், 404 வாக்குப்பதிவு இயந்திரங்கள் , 434 வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரங்கள். புவனகிரி சட்டமன்ற தொகுதிக்கு 420 வாக்கு செலுத்தும் கருவிகள், 420 வாக்குப்பதிவு இயந்திரங்கள் , 452 வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரங்கள்.

சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு 425 வாக்கு செலுத்தும் கருவிகள், 425 வாக்குப்பதிவு இயந்திரங்கள் , 457 வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரங்கள். காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதிக்கு 382 வாக்கு செலுத்தும் கருவிகள், 382 வாக்குப்பதிவு இயந்திரங்கள் , 411 வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரங்கள், ஆக மொத்தம் 3604 வாக்கு செலுத்தும் கருவிகள் 3604 வாக்குப்பதிவு இயந்திரங்கள் , 3877 வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரங்கள் என கணக்கிட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அருண்சத்யா, மாவட்ட தகவல் மைய அலுவலர் அருள்மொழி, தேர்தல் வட்டாட்சியர் பாலமுருகன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *