செய்திகள்

200 அடி டவரில் ஏறிய மதுபோதை வாலிபர்: போலீசார் எச்சரித்து அனுப்பினர்

Spread the love

காஞ்சீபுரம், பிப்.8–-

காஞ்சீபுரம் வணிகர் வீதியில் வசிப்பவர் சுதாகர் (42), கூலி தொழிலாளி. இவர் நேற்று காஞ்சீபுரம் வணிகர் வீதியில் உள்ள 200 அடி உயரம் உள்ள பிஎஸ்என்எல் டவரில் மதுபோதையில் ஏறினார். உடனடியாக அப்பகுதி மக்கள் பெரிய காஞ்சீபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர், போலீசாருடன் அந்த இடத்திற்கு விரைந்து சென்றார்.

அங்கு டவரில் நின்று கொண்டிருந்த அந்த வாலிபரை கீழே இறங்குமாறு போலீசார் கூறினர். அதற்கு அந்த வாலிபர் குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று போதையில் கூறிக்கொண்டே இருந்தார். பிறகு அரை மணி நேரம் பிறகு கீழே இறங்கிய அந்த வாலிபரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *