வாழ்வியல்

காற்றிலிருந்து குடிநீர் தயாரிக்கும் நிறுவனம் சார்பில் சென்னையில் கடைகள் அறிமுகம்

ஆக்வோ அட்மாஸ்ஃபெரிக் வாட்டர் சிஸ்டம்ஸ், காற்றிலிருந்து குடிநீர் தயாரிக்கும் நிறுவனம் சென்னையில் கடைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

ஆக்வோ ஒரு இயற்கை வடிகட்டும் செயல்முறையை உபயோகிக்கிறது, இது தீங்கு விளைவிக்கும் பேக்டீரியா, வைரஸ்கள் அல்லது பூச்சிக் கொல்லிகள் இல்லாத தூய்மையான குடி நீரை வழங்குகிறது. சேகரிக்கப்படும் தண்ணீர் அதன் சேகரிப்பு நிலையில் காய்ச்சி வடிகட்டப்படுகிறது. பின்னர் அது சிபாரிசு செய்யப்பட்ட குடிக்கும் தர நிலைகளை அடைவதற்கு மெஷினிலேயே தண்ணீரில் மினரல்கள் (கனிமங்கள்) சேர்க்கப்படுகிறது. ஆக்வோ இயந்திரங்களிலிருந்து நீங்கள் குடிக்கும் தண்ணீர், ஒரு லிட்டருக்கு ரூ 1.75 முதல் ரூ. 2.00 மட்டுமே விலை கொண்டது. இது மின்சார செலவு மட்டுமே.

ஆக்வோ அட்மாஸ்ஃபரிக் வாட்டர் சிஸ்டத்தின் நிறுவனர் நவ்கரன்சிங் பாகா பேசுகையில், சென்னை எங்களுடைய மிகப் பெரிய மார்கெட்டாக இருந்திருக்கிறது. 2019ம் ஆண்டு கோடைகால மாதங்களில், சென்னையைத் தாக்கிய தண்ணீர் தட்டுப்பாடின்போது ஒரு மாற்று தீர்வை அளிப்பதில் எக்வோ ஒருமுக்கிய பங்கு வகித்தது. தற்போது, சென்னை எங்கிலும் உள்ள பள்ளிகள், குடியிருப்பு வளாகங்கள், தனியார் நிறுவனங்களில் நாங்கள் 50 –க்கும் அதிகமான யந்திரங்களை நாங்கள் நிறுவி உள்ளோம் என்றார்.

இதுவரையில், நாங்கள் வீடு மற்றும் சிறு அலுவலக மாடல் ஆக்வோவை அறிமுகப்படுத்திய பின், எங்களுடைய எதிர்கால வாடிக்கையாளர்களுக்கு ஆக்வோஸ்ஃபியர்கள் மூலமாக எங்களுடைய நுகர்வோர்கள், கடைகளுக்கு சென்று ஒரு நேரடி அனுபவத்தை பெறலாம் மற்றும் கடையிலேயே முன்பதிவுகளைச் செய்யலாம்.

இந்த யந்திரங்கள் 7 நாட்களுக்குள் நிறுவப்படும்.

சென்னையில் ஆக்வோஸ்பியரை நிறுவுவதில் சுமார் ரூபாய் 3 கோடிகளை முதலீடு செய்யத் திட்டமிடுகிறது. மற்றும் இறுதியாக இல்லங்களுக்கான எங்களுடைய யந்திரங்கள் உற்பத்திக்காக தமிழ்நாட்டில் ஒரு தயாரிப்புஆலைநிறுவவும்விரும்புகிறோம்.

தென்னிந்தியாவில் கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேஷில் அதிகமான ஆக்வோஸ்ஃபியர்கள் எக்ஸ்பீரிஷன்ஷல் சென்டர்கள் மற்றும் நடப்பு ஆண்டில் நாடு முழுவதிலும் 30 கடைகளை அறிமுகப்படுத்த உள்ளோம் என்றார்.

இது ஒரு மணி நேரத்திற்கு ஒரு யூனிட் மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது.

இது பற்றி அறிய www.akvosphere.com/ வலைதளத்தைப் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *