செய்திகள்

எடப்பாடி தலைமையில் மீண்டும் அண்ணா தி.மு.க ஆட்சி மலரும் : வாலாஜாபாத் பா.கணேசன் பேச்சு

ரூ.12,110 கோடி விவசாய கடன்கள் தள்ளுபடி

எடப்பாடி தலைமையில் மீண்டும் அண்ணா தி.மு.க ஆட்சி மலரும் :

வாலாஜாபாத் பா.கணேசன் பேச்சு

தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் இனிப்பு வழங்கினார்

காஞ்சீபுரம், பிப். 6 –

தமிழகத்தில் ரூ.12,110 கோடி விவசாய கடன்களை தள்ளுபடி செய்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். இதன்மூலம் 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகள் பலனடைவர்.

இந்த மகிழ்ச்சியான செய்தியை அறிந்ததும், முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவிக்கும் வகையில், காஞ்சீபுரம் அருகே வாலாஜாபாத் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சங்கத்தின் தலைவரும், காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், கழக அமைப்பு செயலாளருமான வாலாஜாபாத் பா.கணேசன் மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் நாயக்கன்குப்பம் என்.ஆர்.பழனி மற்றும் விவசாயிகளுக்கு இனிப்புகளை வழங்கினார். பிறகு அவர் பேசியதாவது:

அம்மாவின் ஆசியோடு தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் தமிழகத்தில் நல்வழியில் ஆட்சி செய்து கொண்டு வருகின்றனர்.

நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, நல்ல பல திட்டங்களை அம்மாவின் தலைமையிலான எடப்பாடி அரசு செயல்படுத்தி வருகிறது. விவசாயிகள் துயர் துடைக்கும் பசுமை காவலராக நமது முதல்வர் திகழ்கிறார். ரூ.12,110 கோடி விவசாயி கடன்களை தள்ளுபடி செய்து புதிய சரித்திரம் படைத்திருக்கிறார். நமது முதலமைச்சர் ஒரு விவசாயி என்பதால், அவர்களின் நிலைமை அவருக்கு நன்றாக தெரியும். நானும் விவசாயிதான் என்று பொய்யான தம்பட்டம் அடித்து கொள்பவர் மத்தியில், உண்மையான விவசாயியாக நமது முதலமைச்சர் நிமிர்ந்து நிற்கிறார்.

வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் அண்ணா தி.மு.க அமோக வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடி முதல்வராக அரியணையில் அமருவார். இது உறுதி.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் அக்ரி கே.நாகராஜன், மாவட்ட பேரவை அவைத்தலைவர் தென்னேரி என்.எம்.வரதராஜூலு, ஒ.வி.ரவி, மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் கவிஞர் எஸ்.முருகவேள், மாவட்ட மருத்துவ அணி நிர்வாகி மெடிக்கல் தீனா மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *