செய்திகள்

தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலர்களுக்கு ஆலோசனைகள்: வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் வழங்கினார்

வேலூர், மார்ச் 1–

வேலூர் மாவட்டத்தில் தேர்தல் புகார்களை கையாள்வது எப்படி? என்பது குறித்து தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலர்களுக்கு கலெக்டர் சண்முகசுந்தரம் ஆலோசனைகள் வழங்கினார்.வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சட்டமன்ற தேர்தல் -2021 முன்னிட்டு தேர்தல் கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்து, கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பை கலெக்டர் அ.சண்முகசுந்தரம் துவக்கி வைத்தார்.

கட்டுப்பாட்டு அறையில் பணியாற்ற உள்ள ஊழியர்களுக்கான ஆலோசனை வழங்கி பேசியதாவது:

கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் அதிகாரிகள் பணி நேரம் முடிந்து அடுத்த பணிக்கு வருபவர்களிடம் பொறுப்புக்களை ஒப்படைக்கும் வரை காத்திருக்க வேண்டும். புகார்கள் வந்தால் அது எந்த தொகுதி முகவரி என தெளிவாக கேட்டு எழுத வேண்டும். குறிப்பாக புகார் வரும் நேரம் குறித்து பதிவேட்டில் எழுத வேண்டும்.

புகாரை சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட பறக்கும் படையினருக்கு தகவல் தெரிவித்து புகார் தெரிவித்த நேரம் குறிப்பிட வேண்டும். அவர்கள் அந்த புகார் மீது எடுத்த நடவடிக்கை மற்றும் நேரம் குறிப்பிட வேண்டும். புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்காத பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், புகார் தருபவர்களின் பெயர் முகவரிகளை தருமாறு கட்டாயப்படுத்தக்கூடாது. கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்கள் குறித்து தேர்தல் அலுவலர் அலுவலகத்திலும் தெரிவிக்க வேண்டும். குறிப்பாக தினமும் வரும் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கலெக்டரிடம் கையொப்பம் பெற வேண்டும். தேர்தல் தொடர்பான புகார்களை 18004255668 என்ற இலவச அழைப்பு எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) கணேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (ஊரக வளர்ச்சி) புருஷோத்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *