காஞ்சீபுரம், ஜன 12 –
தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலினை கண்டித்து ஸ்ரீபெரும்புதூர் மணிகூண்டு அருகே இன்று காலை அண்ணா தி.மு.க. வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இதற்கு காஞ்சீபுரம் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் தலைமை வகித்தார். இதில் மாவட்ட தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.கோகுலஇந்திரா கலந்து கொண்டு, தமிழக முதலமைச்சரை கொச்சைப்படுத்தி பேசிய உதயநிதி ஸ்டாலினை கண்டித்து பேசினார்.
பிறகு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது ‘‘கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம் உதயநிதி பேச்சை கண்டிக்கிறோம்’’, ‘‘மாநில முதல்வர் என்பவர் மக்கள் தலைவர் அல்லவா? மாநில முதல்வரை மதிப்பது, மக்களை மதிப்பது அல்லவா? பிஞ்சியிலேயே பழுத்த ஸ்டாலின் மகனே நெஞ்சிலே பண்பை வளர்த்து கொள்’’, ‘‘மன்னிப்பு கேள், மன்னிப்பு கேள், மக்கள் தலைவர் முதல்வரை மரியாதையின்றி பேசிய உதயநிதியே மன்னிப்பு கேள்’’ உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. கே.பழனி, காஞ்சீபுரம் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் முத்தியால்பேட்டை ஆர்.வி. ரஞ்சித்குமார், முன்னாள் எம்.பி. காஞ்சீ பன்னீர்செல்வம், மாநில எம்.ஜி.ஆர் இளைஞரணி நிர்வாகி எஸ்.எஸ்.ஆர்.சத்தியா, ஒன்றிய கழக செயலாளர் அத்திவாக்கம் டாக்டர் செ.ரமேஷ், மாவட்ட கழக அவைத்தலைவர் குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, கே.யு.எஸ்.சோமசுந்தரம், வீ.வள்ளிநாயகம்,வி.ஆர்.மணிவண்ணன், போந்தூர் எஸ்.செந்தில்ராஜன், எறையூர் இ.பி.முனுசாமி, இருங்காட்டுக்கோட்டை எஸ்.சிவக்குமார், வடகால் ஆர்.சவரிங்கம், வெங்காடு பி.உலகநாதன், ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் எஸ்.குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.