செய்திகள்

கர்நாடக மாநிலச் செயலாளர் நீக்கம்: எடப்பாடி, ஓ.பி.எஸ். அறிவிப்பு

சென்னை, பிப்.4–

கர்நாடக மாநில கழகச் செயலாளர் எம்.பி.யுவராஜ் கட்சியில் இருந்து நீக்கி வைக்கப்படுகிறார் என்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில் கூறியிருப்பதாவது:–

அண்ணா தி.மு.க.வின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் கர்நாடக மாநில கழகச் செயலாளர் எம்.பி.யுவராஜ் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

அண்ணா தி.மு.க. உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *