செய்திகள்

திருவொற்றியூரில் அண்ணா தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனைக் கூட்டம்

திருவொற்றியூர், டிச.31–

திருவொற்றியூரில் அண்ணா தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருவெற்றியூர் மேற்குப்பகுதி தகவல் தொழில் நுட்ப அணி செயலாளராக கே.கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தகவல் தொழில் நுட்ப அணி ஆலோசனைக்கூட்டம் பகுதி செயலாளர் கே.கார்த்திக் தலைமையில் திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் விடுதியில் நடந்தது.

கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தை முறியடிக்க தகவல் தொழில் நுட்ப அணி பெரிதும் உதவ வேண்டும். அதற்கான முறையான பயிற்சிகள் வழங்கப்படும். ஒவ்வொரு வார்டிலும் ஒவ்வொரு பூத்திலும் வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கி அதன் மூலம் தமிழக அரசின் சாதனைகளை பொதுமக்களுக்கு கொண்டு செல்ல வேண்டுமென கூட்டத்தில் வலியுறுத்தி பேசப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் மாதவரம் வி.மூர்த்தி, திருவொற்றியூர் கழக பகுதி செயலாளர்கள் முன்னாள் எம்எல்ஏ கே.குப்பன், அஜாக்ஸ் பரமசிவம், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் எம்.சங்கர், அண்ணா திமுக பொருளாளர் பி.ராஜேந்திரன், எஸ்.பி.அரவிந்தன், ஆர்.வி.மணி, ஜி.ரவிகுமார், ஆர்.வி.பாலு, எம்.நரேந்திரன், பாபா வி.கே.ஜெயபால், எம்.மணிமாறன், எ.எபினேசர், தேரடி பரமசிவம், சரவணன், மாரி, முருகவேல், ஜோசப், முல்லை ராஜேஷ், ஸ்ரீதர், திருஞானசம்பந்தம், லெனின், புகழேந்தி, தாங்கல்ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் உறுப்பினர் அடையாள அட்டையை பகுதி செயலாளர் கே.கார்த்திக் வழங்கினர். மேலும் ஒவ்வொரு பகுதியிலும் புதிதாக படித்த இளைஞர்களை தகவல் தொழில்நுட்ப அணிக்கு சேர்க்குமாறு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *