செய்திகள்

பெரம்பலூர், தஞ்சாவூர் தொகுதிகளுக்கு அண்ணா தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை, மார்ச்.12-

பெரம்பலூர், தஞ்சாவூர் தொகுதிகளுக்கு அண்ணா தி.மு.க. வேட்பாளர்களை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

இது குறித்து தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:–

அண்ணா தி.மு.க. ஆட்சி மன்ற குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி 6.4.2021 அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில்

பெரம்பலூர் (தனி) தொகுதிக்கு பெரம்பலூர் மாவட்ட மாணவரணி செயலாளர் இளம்பை ஆர்.தமிழ்செல்வன் எம்.எல்.ஏ.,

தஞ்சாவூர் தொகுதிக்கு கரந்தை பகுதி செயலாளர் வி.அறிவுடைநம்பி ஆகியோர் அண்ணா தி.மு.க. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

லால்குடி வேட்பாளர் வாபஸ்

அதேநேரம் ஜி.கே.வாசன் தலைமையிலான த.மா.கா.வுக்கு 6 தொகுதிகள் வழங்கப்பட்டது. 6ல் ஒன்றாக இடம்பெற்றிருந்த லால்குடி தொகுதிக்கு, ஏற்கனவே அண்ணா தி.மு.க. வேட்பாளராக ராஜாராம் அறிவிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் லால்குடி த.மா.கா.வுக்கு வழங்கப்பட்ட நிலையில், அத்தொகுதிக்கு அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளர் வாபஸ் பெறப்படுகிறார் என்றும் அண்ணா தி.மு.க. கழகம் அறிவித்துள்ளது.

இவ்வாறு எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளனர்.

தற்போதைய சூழலில் அண்ணா தி.மு.க. 178 தொகுதிகளிலும், பா.ம.க. 23 தொகுதிகளும், பா.ஜ.க. 20 தொகுதிகளிலும், த.மா.கா. 6 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. அதேபோல பெருந்தலைவர் மக்கள் கட்சி, புரட்சி பாரதம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், மூவேந்தர் முன்னேற்ற கழகம், பசும்பொன் தேசிய கழகம், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதி என 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் தற்போது 233 தொகுதிகள் முடிவு பெற்றுள்ளன.

பத்மநாபபுரம் தொகுதி மட்டும் இன்னும் யாருக்கும் ஒதுக்கப்படாமல் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *