செய்திகள்

செய்யாறில் அண்ணா தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் தூசி.கே. மோகன் எம்.எல்.ஏ. பங்கேற்பு

திருவண்ணாமலை, ஜன. 21–

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அண்ணா தி.மு.க. சார்பில் செய்யாறில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செய்யாறு, ஆரணி, வந்தவாசி, கலசபாக்கம், ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கழக செயலாளர் தூசி கே மோகன் எம்.எல்.ஏ., தலைமையில் நடைபெற்றது.

முன்னாள் அமைச்சர் முக்கூர்.என். சுப்பிரமணியன், மாவட்ட அவைத்தலைவர் டிகேபி. மணி, மாவட்ட இணை செயலாளர் விமலா மகேந்திரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக அமைப்பு செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேவூர்.எஸ். ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா விட்டு சென்ற அனைத்து பணிகளையும், மக்களுக்கான திட்டங்களையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் வகிக்கிறது. நமது ஆட்சி வெற்றி நடைபோட வேண்டுமென்றால் கழகத்தினரோடு பூத் கமிட்டி நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு தலைமை யாரை அடையாளம் காட்டுகிறதோ அவரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.

மாவட்ட கழக செயலாளர் தூசி.கே. மோகன் எம்.எல்.ஏ. பேசுகையில். மறைந்த முதல்வர் ஜெயலலிதா இல்லாமல் சந்திக்கின்ற முதல் சட்டமன்ற தேர்தல் அனைவரும் தேர்தல் களத்தில் விழிப்போடு பணி செய்ய வேண்டும். எல்லோருடைய உண்மையான உழைப்பு இருந்தால்தான் வெற்றி பெற முடியும். தி.மு.க.வின் பொய் பிரச்சாரத்தை முறியடிக்க அனைவரும் ஒண்றிணைந்து பாடுபட வேண்டும் என்றார்.

இந்த கூட்டத்தில் ஆரணி நகர செயலாளர் அசோக்குமார், ஆவின் துணை சேர்மன் பாரி.பி. பாபு, ஒன்றிய கழகச் செயலாளர்கள் செய்யாறு மகேந்திரன், அனக்காவூர் துரை, கலசபாக்கம் திருநாவுக்கரசு, தெள்ளார் டி.வி. பச்சையப்பன், ஆரணி பிஆர்ஜி சேகர், மேற்குஆரணி கொளத்தூர் பி திருமால், வந்தவாசி நகர செயலாளர் பாஷா, மேற்குஆரணி ஒன்றிய சேர்மன் பச்சையம்மாள்சீனிவாசன், மாவட்ட நிர்வாகிகள். அம்மாபேரவை பாஸ்கர் ரெட்டியார், மகளிரணி நளினிமனோகரன், ஆரணி கலைவாணி, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை திருமூலன், மாணவரணி சுரேஷ்நாராயணன், மாவட்ட பிரதிநிதி இ.பி. நகர் குமார் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *