செய்திகள்

புதுச்சேரி மாநிலத்தில் ஓம்சக்தி சேகர் தலைமையில் அண்ணா தி.மு.க. 49 ம் ஆண்டு துவக்க விழா

புதுச்சேரி,அக்.17

அண்ணா தி.மு.க. கழக 49 ம் ஆண்டு துவக்க விழா புதுச்சேரி மாநிலத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., ஓம்சக்தி சேகர் தலைமையில் நடைபெற்றது.

புதுச்சேரி மாநிலம் சார்பில் ஓம்சக்தி சேகர் தலைமையில் குயவர்பாளையம் லெனின் வீதியில் அமைந்துள்ள கழக அலுவலகத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் அலங்கரிக்கப்பட்ட உருவப்படங்களுக்கு ஓம்சக்தி சேகர் மலரஞ்சலி செலுத்தினார். அதனைத்தொடர்ந்து நிர்வாகிகளும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து கழக கொடி ஏற்றி, பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கும் கழகத் தொண்டர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக புதுவை மாநில ஆட்டோ ஓட்டுனர் சங்க நிர்வாகிகள் 25 பேருக்கு சீருடை, தலா 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது.

முன்னதாக ஓதியன் சாலை காவல் நிலையம் அருகிலுள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலை, புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள எம்.ஜி.ஆர்,சிலை, 100 அடி சாலையில் உள்ள ஜெயலலிதாவின் சிலை ஆகியவற்றுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மாநில இணைச் செயலாளர்கள் ஆர். வி. திருநாவுக்கரசு, காசிநாதன், பேராசிரியர் மு. ராமதாஸ், மாநில துணைச் செயலாளர் கோவிந்தம்மாள், செயற்குழு உறுப்பினர் இந்திரா முனுசாமி, மாநில அணி செயலாளர்கள் விஜயலட்சுமி, குணசேகர், தொகுதி செயலாளர்கள் வில்லியனூர் மணி, நெல்லித்தோப்பு கணேஷ், பூக்கடை, மாநில பிற அணி நிர்வாகிகள் மாசிலா குப்புசாமி, முருகதாஸ் லட்சுமணா, மலை செல்வராஜ், மகேஷ், மீனா, லதா, விக்னேஷ், பொதுக்குழு உறுப்பினர்கள் நந்தன், பழனி, ஞானப்பூங்கோதை, கல்பனா, முன்னாள் கவுன்சிலர்கள் சதாசிவம், சேகர், மாணவரணி சரவணன், சுகதேவ் சங்கர், அசோகா சுப்ரமணி, முத்தியால்பேட்டை கண்ணன், வீரமுத்து, பாலு, மணவெளி தீனதயாளன் மற்றும் நெல்லித்தோப்பு தொகுதியை சேர்ந்த நிர்வாகிகள் புகழ், வெற்றியழகன், மகாலிங்கம், சக்திவேல், சங்கர் உடையார், வெங்கடேசன், கோபால், மதியழகன், பிரபு, அறிவு, தம்பா, முருகன், வேல்முருகன், சுரேஷ்பாபு, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *