செய்திகள்

கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 31–ந் தேதி வரை நேரடி மாணவர் சேர்க்கை

சென்னை, அக். 26

தமிழ்நாடு அரசு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் செயல்படும் கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் உள்ள காலியிடங்களை நிரப்பிடும் பொருட்டு நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் சீத்தாலட்சுமி கூறியிருப்பதாவது:– 2020–ம் ஆண்டிற்கு கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத 17 தொழிற்பிரிவுகளில் 8 மற்றும் 10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாய்ப்பு தரும் விதமாக நேரடி சேர்க்கை 23.10.2020 முதல் 31.10.2020 வரை நடைபெற்று வருகிறது.

இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்பும் தகுதியுள்ள மாணவர்கள் இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடியாக பயிற்சியில் சேரலாம். கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தகுதி பெற்று சேரும் மாணவர்களுக்கு அரசால் கட்டணமில்லா பயிற்சி, விலையில்லா மடிகணினி, விலையில்லா மிதிவண்டி, கட்டணமில்லா பேருந்து பயணச்சலுகை, விலையில்லா பாடப்புத்தகம், விலையில்லா சீருடை, மாதாந்திர உதவித்தொகை ரூ.500 மற்றும் விலையில்லா வரைபட கருவிகள் என பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சி முடிவில் மத்திய அரசின் சான்றிதழ், பெரிய வேலை அளிக்கும் (டாப் லெவல்) மற்றும் முன்னோடி நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் வழங்கப்படும்.

மேலும் விவரங்கள் அறிய இத்தொழிற் பயிற்சி நிலைய தொலைபேசி எண்கள் 044-22501350, 044-22501982, 9499055649, 9499055651–களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *