செய்திகள்

சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக கூடுதல் சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு

Spread the love

சென்னை, நவ.19–

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று திரும்பும் பக்தர்களின் வசதிக்காக கூடுதல் சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

கொல்லம் –- சென்னை :– கொல்லத்தில் இருந்து டிசம்பர் 7, 14, 21, 28, ஜனவரி 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு சிறப்புக் கட்டண ரெயில் (06062) புறப்பட்டு, மறுநாள் காலை 9.50 மணிக்கு சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரெயில் நிலையத்தை வந்தடையும்.

சென்னை – -கொல்லம்:– சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரலில் இருந்து டிசம்பர் 1, 8, 15, 29, ஜனவரி 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் மாலை 4.15 மணிக்கு சிறப்புக் கட்டண ரெயில்(06063) புறப்பட்டு, மறுநாள் காலை 10.10 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.

கொல்லத்தில் இருந்து டிசம்பர் 2, 9, 16, 23, 30, ஜனவரி 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு சிறப்புக் கட்டண ரெயில்(06064) புறப்பட்டு, மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரெயில் நிலையத்தை வந்தடையும்.

திருவனந்தபுரம் –- சென்னை:– திருவனந்தபுரத்தில் இருந்து டிசம்பர் 4, 11,18, 25, ஜனவரி 8, 15 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.45 மணிக்கு சிறப்புக் கட்டண ரெயில் (06048) புறப்பட்டு, மறுநாள் காலை 9.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தை வந்தடையும்.

சென்னை – -திருவனந்தபுரம்:– சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரலில் இருந்து டிசம்பர் 5, 12, 19, 26, ஜனவரி 2, 9, 16 ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்கு சிறப்புக் கட்டண ரெயில் (06047) புறப்பட்டு, மறுநாள் முற்பகல் 11.45 மணிக்கு திருவனந்தபுரத்தை அடையும். இந்தச் சிறப்புக் கட்டண ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *