செய்திகள்

120 குடும்பங்களுக்கு குடிநீர் சுத்திகரிப்பு கலன்கள்: அதானி பவுண்டேசன் வழங்கியது

பொன்னேரி, நவ. 21–

அதானி பவுண்டேசன் சார்பில் 120 குடும்பங்களுக்கு குடிநீர் சுத்திகரிப்பு கலன்கள் வழங்கப்பட்டது.

காட்டுப்பள்ளி துறைமுக பகுதிக்குட்பட்ட சிறு, குறு மற்றும் மீனவ கிராமங்களின் மேம்பாட்டிற்காக அதானி பவுண்டேசன் அதானி பவுண்டேசன், அதானி காட்டுப்பள்ளி துறைமுகம்- சமுதாய வளர்ச்சிப் பணிகள் சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை அரசின் ஒத்துழைப்போடு மேற்கொண்டு வருகின்றது.அதனடிப்படையில் திருவள்ளூர் மாவட்டத்தில் சுகாதாரத்தில் பின்தங்கிய குக்கிராமங்கள் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் குடியிருப்புகளில் வசிக்கும் மக்களின் ஜீவாதார தேவையான சுத்தமான குடிநீர் தேவை பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் பயனாளிகளை தேர்வு செய்து பகுதி வாரியாக தண்ணீர் சுத்திகரிப்பு கலன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு இந்த குடிநீர் சுத்திகரிப்பு கலன்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்று காட்டூரை அடுத்துள்ள திருவெள்ளைவாயல் செங்கழநீர் காலனியில் மேலும் 120 குடும்பங்களுக்கு குடிநீர் சுத்திகரிப்பு கலன்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வுக்கு மீஞ்சூர் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ் தலைமை வகித்து குடிநீர் சுத்திகரிப்பு கலன்களை பயனாளிகளுக்கு வழங்கினார். வாயலூர் பஞ்சாயத்து தலைவர் கோபி, துணைத்தலைவர் ராஜேஷ், கவுன்சிலர் மகாலட்சுமி பிரகாசம், செங்கழநீர்மேடு காலனி வார்டு உறுப்பினர் ராதிகா வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் அதானி பவுண்டேசன் மற்றும் துறைமுக அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *