செய்திகள்

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் 103 மனுக்கள் மீது நடவடிக்கை: காஞ்சீபுரம் கலெக்டர் தகவல்

Spread the love

காஞ்சீபுரம், நவ. 23–

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் பா.பொன்னையா தலைமையில் நடைபெற்றது.

இதில் பெறப்பட்ட 147 மனுக்களில் 103 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்துக்கு வேளாண்மை இணை இயக்குநர் அசோகன், கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் ஆர்.கே.சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) அ.சுகுமார் வரவேற்றார். இதில் அரசின் பல்வேறு துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

விவசாயிகளிடமிருந்து ஏற்கெனவே பெறப்பட்ட 147 மனுக்களில் 103 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் பரிசீலனையில் உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் ஈசூர்–வள்ளிபுரம் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகளை விரைந்து கட்டி முடித்ததற்காகவும், அவற்றில் தேங்கிய தண்ணீரால் தற்போது ஏராளமான கிராமங்கள் பாசன வசதி பெற்றதற்காகவும் கலெக்டருக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

கூட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கே.சண்முகராஜ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (நீர்வளம்) தியாகராஜன் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் சங்கப் பிரநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *