செய்திகள்

புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பதிவு செய்யாதவர்கள் மீது நடவடிக்கை: அரசு எச்சரிக்கை

சென்னை, அக்.17–

புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பதிவு செய்யாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.

மாநிலங்களுக்கு இடையிலான புலம் பெயர்ந்த தொழிலாளர் சட்டம், 1979–-ன்படி புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பணியில் அமர்த்தும் அனைத்து வேலை அளிப்போரும் பணியமர்த்தப்பட்ட புலம் பெயர்ந்த பணியாளர்களின் முழு விவரங்களை உரிய அலுவலரிடம் பதிவு செய்ய வேண்டும்.

தமிழக அரசால் இதற்கென பிரத்யேகமான வலைதளம் (labour.tn.gov.in/ism) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வலைதளத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் விவரங்களை பதிவு செய்வதை எளிமைப்படுத்தும் வகையில் அனைத்து தொழிற்சாலைகள், கட்டட ஒப்பந்ததாரர்கள், வணிக நிறுவனங்களுக்கு தனியாக உள்நுழைவு (login) மற்றும் கடவுச் சொல் (password) அளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் சில வேலையளிப்போர்கள் இதனை சரிவர பதிவு செய்யாமல் இருப்பது தெரியவருகிறது. எனவே, உடனடியாக புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் முழுவிவரங்களை இந்த வலைதளத்தில் எவ்வித விடுதலுமின்றி பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. இதனை செய்யத் தவறும் பட்சத்தில் தொழிற்சாலைகள், கட்டட ஒப்பந்ததாரர்கள், வணிக நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *