எங்களைப் பற்றி..

மக்கள் குரல்: நம்பகமான தமிழ் செய்தித் தளம்!

1973 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ந்தேதி எம்.சண்முகவேல் அவர்களை நிறுவனராக கொண்டு மக்கள் குரல் நாளிதழ் அச்சில் தொடங்கப்பட்டது. அப்போது தொடங்கி, தொழில்நுட்ப முன்னேற்றம், வளர்ச்சிக்கு ஏற்ப மக்கள் குரல் தன்னை புதுப்பித்துக்கொள்வதில் முன்னோடியாக இருந்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக 1982 முதலே அச்சுக்கோர்ப்பு பணிகள் மெல்ல மெல்ல நவீன கணினி முறைக்கு (DTP) மாற தொடங்கியது. 1988 ஆம் ஆண்டில் முழுமையாக கணினி துறைக்கு மக்கள் குரல் மாறி தொழில்நுட்ப ஏற்பிலும் முன்னோடி என்பதை நாட்டிற்கு காட்டியது.

அதன் தொடர்ச்சியாக, 2000 ஆண்டு தொடங்கி செய்திகளை டிஜிட்டலில் வெளியிட தொடங்கி இருந்தாலும் (newsmen.com) , முழுமையான இணையதள இதழாக, மக்கள் குரல் இணையதளம், 2012 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, இன்று தமிழ் பேசும் கோடிக்கணக்கான மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றும் ஒரு நம்பகமான “தமிழ் செய்தித் தளம்” (Tamil News Platform) என ஊடகமாக வளர்ந்துள்ளது. 2012 முதல் ஆன்லைன் முறையிலும் வெற்றிகரமாக செயல்படும் மக்கள் குரல், கடந்த 13 ஆண்டுகளாக, துல்லியமான, நடுநிலையான, மற்றும் பயனுள்ள செய்திகளைத் தமிழில் வழங்குவதில் முன்னோடியாகத் திகழ்கிறோம்.

மக்கள் குரல் நாளிதழ் நாளிதளாக அச்சில் தொடங்கப்பட்டு 53 ஆண்டுகளை கடந்து வெற்றிநடை போட்டுக்கொண்டுள்ளது.

தமிழ் மொழியில் தகவல்களை வழங்கும் எங்களின் தனித்துவம். இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்தும் மக்களில் ஆங்கிலம் அல்லாத மொழிகளைப் பேசுபவர்களின் எண்ணிக்கை 75% ஐ தாண்டும் என நம்பகமான அறிக்கைகள் கணிக்கின்றன. இந்தக் கணிப்பை முன்கூட்டியே உணர்ந்து, ஆங்கிலம் பேசாத இந்திய இணையப் பயனர்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் மக்கள் குரல் இணைய தளத்தை தொடங்கினோம்.

இந்திய நாட்டின் இணைய உள்கட்டமைப்பு நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து, இணையம் அனைவரின் மொபைல் போன்களையும் அடைந்துள்ள இந்தத் தருணத்தில், தமிழ் மொழியில் செய்திகளை வழங்குவதில் எங்களின் நீண்டகால அனுபவம், ஆர்வம், மற்றும் தொலைநோக்குப் பார்வை ஆகியவை எங்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தி, தமிழ் செய்தித் தளங்களிடையே முன்னணி இடத்தில் வைத்திருக்கிறது.

அர்ப்பணிக்கப்பட்ட அணி

100 க்கும் மேற்பட்ட முழுநேர பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நிபுணர்களைக் கொண்ட அர்ப்பணிக்கப்பட்ட குழுவுடன், மக்கள் குரல் செய்திகளை உரை, காணொளி, படங்கள் மற்றும் பாட்காஸ்ட் ( Podcast ) வடிவங்களில் வழங்குவதில் முன்னோடியாக உள்ளது. இணையம், WAP மற்றும் மொபைல் பயன்பாடுகள் மூலம் எங்கள் தளத்தை அணுகலாம். மக்கள் குரல் இணையதளம் நாள் முழுவதும் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது. தேசியச் செய்திகள், சர்வதேசச் செய்திகள், விளையாட்டு, வணிகம், பயணம், கேட்ஜெட், பொழுதுபோக்கு, வாழ்க்கை முறை போன்ற பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களை நாங்கள் வழங்குகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களின் தாக்கம்

மக்கள் குரல் வழங்கும் செய்திகள் வாசகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு, சமூக ஊடக தளங்களில் அதிக அளவில் பகிரப்படுகின்றன. Facebook, Instagram, twitter மற்றும் YouTube இல் நாங்கள் வழக்கமான நிகழ்ச்சிகளை வழங்குகிறோம்.

இவற்றில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களின் நேர்காணல்கள், அரசியல் விவாதங்கள், தினசரி செய்தித் துணுக்குகள், ஆழமான பகுப்பாய்வுகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், மற்றும் அனைத்து முக்கியப் பிரச்சினைகள் குறித்த செய்திகள் அடங்கும்.

அரசியல், சமூகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, வணிகம், தொழில்நுட்பம் போன்ற அனைத்து துறை செய்திகளையும் மொபைல் போன்களில் மட்டுமல்லாது, சமூக ஊடகங்களிலும் நம்பகமான செய்திகளை வெளியிட்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் மக்கள் குரல் முன்னிலையில் உள்ளது.

நம்பகமான டிஜிட்டல் மதிப்பீட்டு தரவரிசையில் மக்கள் குரல் எப்போதும் முன்னணி இடத்தில் இடம்பெற்றுள்ளது. பிராந்திய மக்களிடையே மக்கள் குரல் நாளிதழின் நிகரற்ற புகழ் காரணமாக, முன்னணி பிராந்திய மொழி போர்ட்டல் எனப் பெருமையுடன் அழைக்கப்படுகிறோம்.

ஒரு முன்னணி டிஜிட்டல் வெளியீட்டாளர் என்ற முறையில், உண்மையான, அச்சமற்ற, நேர்மையான, நடுநிலையான, மற்றும் மதிப்பு சார்ந்த பத்திரிகை நெறிமுறைகளைப் பாதுகாத்து நிலைநிறுத்துவதில் எங்களின் பொறுப்பை மக்கள் குரல் முழுமையாக உணர்ந்து செயல்படுகிறது.