வாழ்வியல்

திரிகடுகம் , சிறுபஞ்சமூலம் , ஏலாதி என்றால் என்ன?

நல்லாதனாரின் திரிகடுகம், காரியாசானின் சிறுபஞ்சமூலம், கணிமேதாவியாரின் ஏலாதி…இவை எல்லாம், பழைய தமிழ் நூல்கள். இன்றைய தலைமுறை இவற்றை அறிந்தும் அறியாமலும் சென்று கொண்டிருக்கிறது.

அந்த நூல் பெயர்களின் அர்த்தம் என்ன என்று ஆராய்ந்தால், அவை அனைத்தும் நம் முன்னோர் வாழ்வில் தவிர்க்க முடியாமல் இருந்த மூலிகை மருந்துகளின் பெயர்கள் என்பது தெரியும்.

சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்று பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் மருந்துதான் திரிகடுகம்;

கண்டங்கத்திரி வேர், சிறுவழுதுணை வேர், சிறுமல்லி வேர், நெருஞ்சி வேர், பெருமல்லி வேர் ஆகிய ஐந்து பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுவது, சிறுபஞ்சமூலம்;

ஏலம், இலவங்கம், சிறுநாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய ஆறு பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் மருந்து ஏலாதி.

அந்தக் காலத்தில், ‘சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை; சுப்பிரமணிக்கு மிஞ்சிய சாமியுமில்லை’ என்று நம்பினர். அதனால்தான், ‘காலை இஞ்சி; கடும்பகல் சுக்கு; மாலை மிளகு; மண்டலம் தின்றால் கோல் ஊன்றி நடந்தவரும் கோலை வீசி நடப்பரே’ என்று பாடினர்.

இன்று பல்வேறு சமூக சிக்கல்களின் விளைவாக நோய்களின் பரிணாமம் வெவ்வேறு வகைகளில் கிளைவிட்டு பரவுகிறது. அதை எதிர்கொள்ள, ஆங்கில மருத்துவம் மட்டும் போதாது என்பதை, சமூகம் உணர்ந்து வருகிறது. அதனால் தான் இன்றும் நாட்டு மருந்துகளுக்கு ‘கிராக்கி’ இருக்கிறது.

சென்னையிலேயே, நாட்டு மருந்துக் கடைகளுக்கு என்று சில புகழ்பெற்ற இடங்கள் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *