சென்னை, மார்ச் 1
பேருந்துகளுக்கான டிக்கெட்டுகளை பதிவு செய்வதில் இந்தியாவில் அதிவேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் சந்தை அமைவிடமான அபிபஸ்.காம் (AbhiBus.com) இந்தியாவின் மிகப்பெரிய டிக்கெட் முன்பதிவு செயல்தளமான இந்திய ரெயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் (IRCTC) உடன் இணைந்து கூட்டாக செயல்படுகிறது. ஒவ்வொரு நாளும் 9 இலட்சத்திற்கும் அதிகமான ரெயில் டிக்கெட்டுக்களை வழங்கி வரும் நிலையில், இந்த ஒத்துழைப்பு செயல்பாடு, ஐஆர்சிடிசி வாடிக்கையாளர்களுக்கு தேர்ந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இதில் இந்தியா முழுவதிலும் ஐஆர்சிடிசி செயல்தளத்தின் மீது பேருந்துகளை முன்பதிவு செய்வதற்கான வாய்ப்பை அபிபஸ் ஏதுவாக்கும்.
ஐஆர்சிடிசியின் காத்திருப்பு பட்டியலில் ரெயில் டிக்கெட்டுகள் இருப்பதை மக்கள் காணும்போது ஒரு செயல்தளத்திலிருந்து மற்றொரு செயல்தளத்திற்கு மாறி மாறி செல்வதற்குப் பதிலாக, பேருந்துகளுக்கான டிக்கெட் கிடைக்கும் நிலையை எளிதாக கண்டறியும்படி சிரமமில்லாமல் பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவு அனுபவத்தை இது பயணிகளுக்கு வழங்கும் என்று அபிபஸ் ன் தலைமை வர்த்தக அதிகாரி ஷஷான்க கூனா தெரிவித்தார்.