வர்த்தகம்

சென்னை மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதைக்கு ‘ஏபிபி’ நிறுவனம் தீ தடுப்பு காற்றோட்ட வசதியை நிறுவியது

சென்னை, பிப்.18–

வடசென்னையில் உள்ள சென்னை மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை 9 கி.மீட்டர் நீளத்தில் உள்ளது. இதற்கு காற்றோட்ட வசதியை ‘ஏபிபி’ நிறுவனம் நிறுவி உள்ளது. தீ தடுப்பு வசதியையும் நிறுவியுள்ளது. பிளாட் பாரங்களை குளிரூட்டும் வசதியை அமைத்துள்ளது. இவை உயர் திறனும், நம்பகத்தன்மையும் கொண்டது ஆகும் என்று ஏபிபி வணிய தலைவர் சஞ்சீவ் அரோரா தெரிவித்தார்.

மெட்ரோ ரெயில் சுரங்க பாதைகளில், காற்றின் தரம் மற்றும் தீ பாதுகாப்பு அம்சங்களுக்கு கடுமையான காற்றோட்டம் தர நிலைகள் ஈடேற்றப்பட வேண்டும். சுரங்கப்பாதை காற்றோட்ட வசதியை திறம்பட கட்டுப்படுத்த மின்சார மோட்டர்களுடன் ஏபிபி சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ரெயில் நிலையங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளில் மேம்பட்ட காற்று பரிமாற்ற அமைப்புகளின் இயக்கத்தில் அவை ஒருங்கிணைந்துள்ளன. பயணிகளின் வசதியை உறுதி செய்வது மற்றும் இயல்பான செயல்பாட்டில் ஆற்றலை சேமிப்பதுடன், பாதுகாப்பான வெளியேற்றம், புகை பிரித்தெடுப்பு மற்றும் தீயணைப்பு ஆகியவற்றிலும் அவை முக்கியப் பங்கினை ஏபிபி நிறுவனம் நிறைவேற்றியுள்ளது என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *