செய்திகள்

160 பயனாளிகளுக்கு ரூ.2 கோடி கடனுதவி: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்

ஆரணி, ஜன. 26–

ஆரணி நகர கூட்டுறவு வங்கி நூற்றாண்டு விழாவில் 160 பயனாளிகளுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான கடனுதவிகளை அமைச்சர் சேவூர். எஸ். இராமச்சந்திரன் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற நூற்றாண்டு விழா மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமையில் மாவட்ட செயலாளர் மற்றும் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தூசி கே. மோகன், கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி. பன்னீர்செல்வம், ஆகியோர் முன்னிலையில் நகர கூட்டுறவு வங்கி தலைவர் ஏ. அசோக்குமார் வறவேற்பில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ். இராமச்சந்திரன் கலந்துகொண்டு ஆரணி நகர கூட்டுறவு வங்கியின் வளர்ச்சியில் பங்கு கொண்ட முக்கிய நபர்கள், வங்கியின் மூத்த உறுப்பினர், நீண்ட நாள் வைப்புதாரர், வங்கியின் கடன் பெற்று தவணை தவறாமல் செலுத்தி வந்த வாடிக்கையாளர்கள், மகளிர் குழுக்கள் ஆகியோருக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசாக கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

மேலும், ஆரணி கூட்டுறவு நகர வங்கியின் மூலமாக மாற்றுத்திறனாளி கடன், மகளிர் குழு கடன், பணிபுரியும் மகளிர் கடன், சிறு வணிக கடன், மகளிர் தொழில் முனைவோர் கடன், வீடு அடமான கடன் என மொத்தம் 160 பயனாளிகளுக்கு ரூ.2.00 கோடி மதிப்பிலான கடனுதவிகளை அமைச்சர் வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:

ஆரணி கூட்டுறவு நகர வங்கியினை 1920 ஆம் ஆண்டு ஸ்ரீராம் ஆச்சரி தலைமையில், சேஷாசலம் செட்டியார், டாக்டர். அரிகரன், சுப்பிரமணிய சாஸ்தியார் மற்றும் வி. ஏ. கோதண்டராம செட்டியார் ஆகியோர் கூட்டாக செயல்பட்டு, ஆரணி கூட்டுறவு நகர வங்கியினை பதிவு செய்து செயல்பட தொடங்க அரும்பாடுபட்டார்கள். இவர்கள் அன்று 150 உறுப்பினர்களுடன் ரூ.10,000 பங்கு மூலதனத்துடன் செயல்பட தொடங்கி 40 ஆண்டுகள் செம்மையாக தொடர்ந்து நிர்வகித்த மேற்காணும் மாமானிதர்களும், இவ்வங்கிக்கான இடம் 10,000 சதுரடி பரப்பினை வழங்கியுள்ள லிங்கப்ப நாயுடுவையும் இத்தருணத்தில் நினைவு கூறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஆரணி கூட்டுறவு நகர வங்கி செயல்பட தொடங்கியது முதல் தொடர்ந்து நிகர இலாபத்தில் செயல்பட்டு வந்துள்ளது. இறுதியாக 2019-–2020 ஆம் ஆண்டில் ரூ.41.66 லட்சம் நிகர இலாபத்தில் இயங்கி வருகிறது. இந்த இனிய நாளில் வங்கி தொடங்கிய நாள் முதல் இன்று வரை பொறுப்பு வகித்த தலைவர்கள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள், கூட்டுறவுத் துறை அலுவலர்கள், தணிக்கைத் துறை அலுவலர்கள், வங்கி ஊழியர்கள், உறுப்பினர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை மண்டல இணைப் பதிவாளர் க. ராஜ்குமார், ஆரணி கூட்டுறவு நகர வங்கித் தலைவர் அசோக்குமார், செய்யாறு சரக துணைப் பதிவாளர் கமலக்கண்ணன், ஆரணி ஒன்றிய செயலாளர் பிஆர்ஜி. சேகர்,, மேற்குஆரணி ஒன்றிய சேர்மன் பச்சையம்மாள்சீனிவாசன், மாவட்ட கவுன்சிலர் கோவிந்தராசன், மாவட்ட விவசாய அணி செயலாளர். அரையாளம். எம். வேலு, முன்னால் மாவட்ட கவுன்சிலர் சேவூர். சம்பத்,ஒன்றிய துணை செயலாளர் இரும்பேடு. வேலு, ஒன்றிய மாணவரணி செயலாளர் கோபி, ஒன்றிய அம்மா பேரவை செயலாளர். பையூர். சதீஷ்குமார், குண்ணத்தூர் செந்தில், நகர கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் ஏ.ஜி. ஆனந்த், இயக்குநர்கள், சைதை. சுப்பிரமணி, இ.பி. நகர். குமார், வரலட்சுமிகணபதி, கலைவாணிஜோதிசெல்வராஜ், ஐசக், மற்றும் வங்கி அலுவலர்கள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *