திருப்போரூர், ஜன. 27–
ஆமூர் செல்லியம்மன் கோவில் கும்பாபிஷக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை அடுத்த ஆமூர் பகுதியில் பழமையான ஸ்ரீ பிடாரி செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட புரனமைப்பு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.
இதையொட்டி கடந்த 20ஆம் தேதி ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ குரு, ஸ்ரீ சக்தி வழிபாடுடன் துவங்கிய கும்பாபிஷேக விழா தொடர்ந்து முதல்கால கலசவேள்வி பூஜை, இடண்டாம் கால வேள்வி பூஜையும் கோபுரத்தில் கலசங்களும் நிறுவப்பட்டது. பின்னர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க இளைஞர் அணித் தலைவர் கோ.ப. செந்தில்குமார் தலைமையில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அண்ணா தி.மு.க. மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகம், முன்னாள் எம்.பி. மரகதம் குமரவேல், முன்னாள் எம்.எல்.எ. தண்டரை கே. மனோகரன், நிர்வாகிகள் எஸ்வந்த்ராவ், ஆனூர் வி. பக்தவச்சலம், தையூர் எஸ். குமரவேல், கவுஸ்பாஷா, பெரும்பாக்கம் சி. விவேகாநந்தன், நந்தகுமார், கே.ஆர். செல்வம், வி.ஆர். செந்தில்குமார், புஷ்பாஆறுமுகம், ஆமூர் ஏழுமலை, குப்பன், சல்குரு, தயாளன், விஜயன், மோகன்ராஜ், அருள்பிரகாஷ் ஆகியோர் உட்பட சுற்றுபுற திரளான பொதுமக்கள் கலந்தகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிசேக அலங்கார ஆராதனை நடைபெற்றது. ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.