வர்த்தகம்

டாக்டர் மேத்தா மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் 99% பேர் உயிர் பிழைப்பு

சேத்துப்பட்டு – வேலப்பன் சாவடியில்

டாக்டர் மேத்தா மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் 99% பேர் உயிர் பிழைப்பு

துணைத் தலைவர் சமீர் மேத்தா தகவல்

சென்னை, நவ. 21

டாக்டர் மேத்தா சேத்துப்பட்டு மற்றும் வேலப்பன் சாவடி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோயாளிகள் சிகிச்சையில் 99% பேர் உயிர் பிழைத்தனர். இதில் 60 வயதுக்கும் மேற்பட்ட முதியவர் அனைவரும் பூரண குணமடைகின்றனர். இதன் பிரத்யேக கொரோனா வார்டு சிறப்பாக நவீன வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது என்று இதன் துணைத் தலைவர் சமீர் மேத்தா தெரிவித்தார்.

தொற்றுநோயை சிறப்பாக கையாண்டது குறித்து துணைத் தலைவர் சமீர் மேத்தா பேசுகையில், “ஆபத்து காலத்தில் தயார்நிலையில் இருத்தல் மற்றும் பொருத்தமான சிகிச்சை ஆகியவையே நல்ல டிஸ்சார்ச் விகிதங்களை பெற்றிருக்கிறோம். வைரஸுக்கு சிகிச்சையளிக்கும்போது வித்தியாசமான நோயாக நம் முன் இருக்கிறது என்பதை நாங்கள் உணர்ந்தோம். முதியோர்களுக்கு சிகிச்சையளிப்பதில் யோசிக்கமுடியாத சாதனையை பதிவு செய்துள்ளோம். இந்த அச்சுறுத்தல் நேரத்திலும் நீரழிவு நோயாளிகள், இருதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் பலவகையான நோய்களுக்காக ஏறக்குறைய 50 நாட்களுக்கு மேல் சிகிச்சை எடுத்துவரும் நோயாளிகளுக்கும், சிறப்பு சிகிச்சையை வழங்கி வருவதும் அடங்கும்’’ என்றார்.

கொரோனா வைரஸ் பாசிட்டிவ் ஆன நோயாளிகளுக்கு பலவிதமான பிற அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டுள்ளன. வயதான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது மட்டுமல்லாமல், கர்ப்பிணி நோயாளிகளையும் வெற்றிகரமான குணமாக்கியிருக்கிறது டாக்டர்.மேத்தா மருத்துவமனை.

டாக்டர் மேத்தா மல்டி ஸ்பெஷாலிட்டி சிகிச்சை என்பது நுரையீரல், நீரிழிவு, இருதயநோய், மகப்பேறியல், மகளிர், குழந்தை, சிறுநீரக இரைப்பைக் குடலியல் மருத்துவ நிபுணர்களை நோயாளிகள் எளிதில் சிகிச்சைக்கு அணுக முடியும் என்பதே ஆகும் என்றார் சமீர் மேத்தா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *