செய்திகள்

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 97.13%

புதுடெல்லி, பிப்.4–

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 97.13% ஆக உள்ளது.

உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.

இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் மேலும் 12 ஆயிரத்து 899 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1 கோடியே 7 லட்சத்து 90 ஆயிரத்து 183 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் 17,824 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 1 கோடியே 4 லட்சத்து 80 ஆயிரத்து 455 ஆக உள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 97.13% உயிரிழப்பு விகிதம் 1.43% ஆக உள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 107 பேர் உயிரிழந்தனர். இதுவரை 1 லட்சத்து 54 ஆயிரத்து 703 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதித்த 1 லட்சத்து 55 ஆயிரத்து 25 பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் மொத்தம் 44,49,552 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 7 லட்சத்து 42 ஆயிரத்து 841 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 19 கோடியே 92 லட்சத்து 16 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *