லாஸ் ஏஞ்சல்ஸ், மார்ச் 3–
2025ம் ஆண்டுக்கான 97வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் “அனோரா’ திரைப்படம் 5 ஆஸ்கர் விருதுகளை வென்று அசத்தியுள்ளது.
விருது வழங்கும் விழாவை நகைச்சுவை நடிகர் கேனன் ஓ பிரைன் தொகுத்து வழங்கினார். இதில் சிறந்த திரைக்கதை, படத்தொகுப்பு, இயக்குனர், நடிகை, திரைப்படம் என மொத்தமாக 5 விருதுகளை அனோரா திரைப்படம் குவித்துள்ளது. இப்படத்திற்காக இயக்குனர் ஷான் பேகர் 4 ஆஸ்கர் விருதுகளை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். சிறந்த இயக்குனர், திரைக்கதை, படத்தொகுப்பு, சிறந்த படம் என ஷான் பேகர் 4 விருதுகளை வென்றார்.
இதன்மூலம் ஒரே படத்திற்காக 4 விருதுகளை வென்ற முதல் நபர் என்ற சாதனையை ஷான் பேகர் பெற்றுள்ளார். மேலும் அனோரா படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை மைக்கி மேடிசனும், ‘தி ப்ரூடலிஸ்ட்’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை ஏட்ரியன் ப்ரோடியுன் வென்றனர்.
அதேசமயம் இந்தியாவில் இருந்து ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட அனுஜா குறும்படத்துக்கு விருது கிடைக்கவில்லை. இந்தப் பிரிவில் ‘ஐம் நாட் எ ரோபட்’ என்ற குறும்படம் ஆஸ்கர் விருதை வென்றது.
ஆஸ்கர் விருது
முழுப் பட்டியல்
சிறந்த இயக்குனர்: ஷான் பேகர் (அனோரா)
சிறந்த திரைப்படம்: அனோரா
சிறந்த நடிகை: மிக்கி மேடிசன் (அனோரா)
சிறந்த நடிகர்: ஏட்ரியன் ப்ராடி ( தி ப்ரூட்டலிஸ்ட்)
சிறந்த துணை நடிகர்: கியரென் குல்கின் (ஏ ரியல் பெயின்)
சிறந்த துணை நடிகை: ஸோயி சல்டானா (எமிலியா பெரேஸ்)
சிறந்த அனிமேஷன் திரைப்படம்: ப்ளோ
சிறந்த தழுவல் திரைக்கதை: கான்கிளேவ்
சிறந்த அசல் திரைக்கதை: அனோரா
சிறந்த ஆடை வடிவமைப்பு: விக்கெட்
சிறந்த ஆவணப்படம்: நோ அதர் லேண்ட்
சிறந்த ஒளிப்பதிவு: தி ப்ரூட்டலிஸ்ட்
சிறந்த ஆவணக் குறும்படம்: ஒன்லி கேர்ள் இன் தி ஆர்கெஸ்ட்ரா
சிறந்த எடிட்டிங்: அனோரா
சிறந்த ஆடை வடிவமைப்பு & சிகை அலங்காரம்: தி சப்ஸ்டன்ஸ்
சிறந்த ஒரிஜினல் பாடல்: எல் மால் (எமிலியா பெரேஸ்)
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: விக்கெட்
சிறந்த அனிமேஷன் குறும்படம்: இன் தி ஷேடோ ஆப் தி சைப்ரஸ்
சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம்: ஐ ஆம் நாட் ஏ ரோபோ
சிறந்த ஒலி: ட்யூன் 2
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்: ட்யூன் 2
சிறந்த சர்வதேச திரைப்படம்: ஐ ஆம் ஸ்டில் ஹியர்
சிறந்த ஒரிஜினல் இசை: தி ப்ரூட்டலிஸ்ட்
ஆஸ்கர் விருது விழாவில் ‘நோ அதர் லேண்ட்’ ஆவணப்படத்தின் இயக்குனர்கள் பாலஸ்தீன மக்களின் இன அழிப்புக்கு எதிராகக் குரல் கொடுத்தனர்.
97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நோ அதர் லேண்ட் என்ற குறும்படம் சிறந்த குறும்படத்துக்கான விருதைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தினை யுவால் ஆப்ரஹாம், பேஸல் அட்ரா, ஹம்தான் பலால் மற்றும் ரேச்சர் ஸோர் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர். இவர்களில் ஒருவர் பெண் இயக்குனர் ஆவார்.
விருது மேடையில் அவர்கள் பாலஸ்தீன இன அழிப்புக்கு எதிராக குரல் கொடுத்தனர். காசா போருக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.