செய்திகள்

926 பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்

திருவண்ணாமலை மாவட்டத்தில்

––––––––––––––––––––––––––––––––––

926 பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்:

அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்

–––––––––––––––––––––––––––––––––

திருவண்ணாமலை, டிச. 27–

திருவண்ணாமலை மாவட்டத்தில் 926 பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகராட்சி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, புனித வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் போளுர் ஊராட்சி ஒன்றியம், படவேடு, ரேணுகொண்டாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி, ஆகிய பள்ளிகளில் பள்ளிக் கல்வித் துறை மூலமாக நடைபெற்ற அரசு விழாவில் 926 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.36 லட்சம் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் செய்யார் தூசி.கே. மோகன், கலசபாக்கம் வி. பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:

மறைந்த முதலமைச்சர் அம்மா விட்டு சென்ற பணிகளை, முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தொடர்ந்து சிறப்பாக அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் செயல்படுத்தி வருகிறார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை மூலமாக 2020-–2021 ஆம் கல்வி ஆண்டில் 11 ஆம் வகுப்பு பயிலும் 22,688 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.9 கோடி மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஆரணி அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் 479 மாணவிகளுக்கு ரூ.18.50 லட்சம் மதிப்பிலும், ஆரணி புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் 292 மாணவிகளுக்கு ரூ.11.30 லட்சம் மதிப்பிலும், படவேடு ரேணுகொண்டாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் 155 மாணவ, மாணவிகளுக்கு ரூ.6.15 லட்சம் மதிப்பிலும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காவும், நிர்வாக காரணத்திற்காகவும், ஆரணி, செய்யாறு, போளுர், திருவண்ணாமலை, செங்கம் என 5 கல்வி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு சிறப்பாக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி உட்பட மாவட்டத்தில் 5 அரசு மேல்நிலைப் பள்ளிகள் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் மருத்துவர் ஆக வேண்டும் என்ற கணவினை நனவாக்கும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2020-–2021 ஆம் கல்வி ஆண்டில் மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கி, அதன் மூலம் 313 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் 11 மாணவர்கள் மருத்துவப் படிப்பிலும், 4 மாணவர்கள் பல்மருத்துவப் படிப்பிலும் சேர்ந்து பயன் அடைந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம், மாவட்ட கல்வி அலுவலர்கள் த. சம்பத்து (ஆரணி), இரா. கலைவாணி (போளுர்), ஆய்வாளர். பாபு, ஆரணி நகர செயலாளர் அசோக்குமார், திருவண்ணாமலை ஆவின் துணை சேர்மன் பாரி பி. பாபு, ஆரணி ஒன்றிய செயலாளர் பிஆர்ஜி. சேகர், மேற்குஆரணி ஒன்றிய செயலாளர் கொளத்தூர். பி. திருமால், மேற்கு ஆரணி ஒன்றிய சேர்மன் பச்சையம்மாள் சீனிவாசன், மமாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எஸ். சுந்தரமூர்த்தி, நகர மாணவரணி செயலாளர் பிஸ்கட் குமரன், ஒன்றிய பேரவை செயலாளர் புங்கம்பாடி. சுரேஷ், மாவட்டபிரதிநிதி இ.பி. நகர் குமார், மற்றும் தலைமை ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *