செய்திகள்

90 டிரைவர்களுக்கு தொற்று: 56 மின்சார ரெயில்கள் ரத்து

கொல்கத்தா, ஏப். 21–

மேற்கு வங்காளத்தில் ரெயில் டிரைவர்கள், கார்டுகள் 90 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் 56 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

கிழக்கு ரயில்வே மண்டலத்தில் உள்ள ரயில் என்ஜின் டிரைவர்கள் மற்றும் கார்டுகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், மேற்குவங்காளத்தில் சீல்டா பிரிவு ரயில்வேயில் 90 டிரைவர்கள் மற்றும் கார்டுகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் அந்த பகுதியில் இயக்கப்பட்டு வந்த 56 மின்சார ரயில்களின் சேவைகள் நேற்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேற்குவங்காளத்தில் புறநகர் ரயில் சேவை ஊரடங்கிறகு பின்னர் நவம்பர் 11ம் தேதி முதல் செயல்பட தொடங்கியது. 7 மாத இடைவெளியில் மீண்டும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது அப்பகுதி மக்களை பெரிதும் கவலை அடையச் செய்திருக்கிறது.

56 சேவைகள் ரத்து

இதுகுறித்து கிழக்கு ரயில்வே செய்தி தொடர்பாளர் இயக்குனர் எக்லபியா சக்கரவர்த்தி செய்தியாளர்களிடம் கூறி இருப்பதாவது:–

”கொரோனாவினால் நிலைமை மிகவும் மோசமாகி இருக்கிறது. 90 டிரைவர்கள் மற்றும் கார்டுகளுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதனால் அஞ்சல் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காகத்தான், 56 உள்ளூர் ரயில்களை ரத்து செய்து இருக்கிறோம்.

முடிந்தவரைக்கும் பயணிகளுக்கு ஏற்படும் பாதிப்பை குறைப்பதற்காக, பயன்பாடு குறைவான நேரத்தில் உள்ள ரயில்களை மட்டுமே ரத்து செய்து இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *