செய்திகள்

குட்டையில் விழுந்த 84 வயது மூதாட்டி உயிருடன் மீட்பு

காஞ்சீபுரம், ஜன. 5–-

காஞ்சீபுரம் மிலிட்டரி ரோடு அருகே உள்ள வசந்தா அவென்யூ நகர் பகுதியில் 10 அடி ஆழமுள்ள ஒரு குட்டையில் 84 வயதான மூதாட்டி தவறுதலாக விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் காஞ்சீபுரம் மாவட்ட தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் குட்டையில் இறங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மூதாட்டியை பத்திரமாக உயிருடன் மீட்டனர். பிறகு அவரை முதலுதவி சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அவர்கள் அனுப்பி வைத்தனர்.

விரைந்து செயல்பட்டு மூதாட்டியை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *