சென்னை, டிச.28–
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் 8 ஆயிரத்து 947 பேர் உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.
இது குறித்து சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழகத்தில் நேற்று புதிதாக ஆண்கள் 623 பேர், பெண்கள் 386 பேர் என 1,009 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 14 ஆயிரத்து 170 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் 2 லட்சத்து 24 ஆயிரத்து 386 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 719 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 290 பேரும், கோவையில் 94 பேரும், திருவள்ளூரில் 48 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 4 லட்சத்து 91 ஆயிரத்து 980 ஆண்கள், 3 லட்சத்து 22 ஆயிரத்து 156 பெண்கள், 3ம் பாலினத்தவர் 34 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றிலிருந்து நேற்று ஒரே நாளில் 1,091 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 7 லட்சத்து 93 ஆயிரத்து 154 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சிகிச்சையில் 8 ஆயிரத்து 947 பேர் உள்ளனர்.
கொரோனாவால் நேற்று 3 பேர் தனியார் மருத்துவமனையிலும், 7 பேர் அரசு மருத்துவமனையிலும் மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்து 69 ஆக உள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 3 ஆயிரத்து 993 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது 67 அரசு ஆய்வகங்கள், 168 தனியார் ஆய்வகங்கள் என 235 ஆய்வகங்களில் இதுவரை 1 கோடியே 39 லட்சத்து 24 ஆயிரத்து 527 கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 64 ஆயிரத்து 283 ஆகும்.
அரசு அனுமதி அளித்த பின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரெயில், சாலை மார்க்கமாக இதுவரை 22 லட்சத்து 35 ஆயிரத்து 401 பேர் வந்துள்ளனர்.
இன்று மட்டும் வெளிமாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் ஒருவருக்கும் தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.