செய்திகள்

750 பேருக்கு இலவச வேலைவாய்ப்பு பயிற்சி; இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திட்ட அறிக்கை: கலெக்டர் சாந்தா வெளியிட்டார்

பெரம்பலூர் மாவட்டத்தில்

750 பேருக்கு இலவச வேலைவாய்ப்பு பயிற்சி; இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திட்டஅறிக்கை:

கலெக்டர் சாந்தா வெளியிட்டார்

 

பெரம்பலூர், ஜூலை.1–

750 பேருக்கு இலவச வேலைவாய்ப்பு பயிற்சியளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்புபயிற்சி மையத்தின் 2019-2020 ஆண்டறிக்கையை பெரம்பலுர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் ஆலோசனைக் குழு முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:–

பெரம்பலுர் மாவட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்புபயிற்சி மையம் மூலம் தையற்பயிற்சி, ஆரிவேலைப்பாடு பயிற்சி, அழகு கலை பயிற்சி, அப்பளம், ஊறுகாய் மற்றும் மசாலா தயாரித்தல் பயிற்சி, காகித பை , காகித உறை மற்றும் கோப்புக்கள் தயாரித்தல் பயிற்சி, செல்போன் பழுது நீக்கல் பயிற்சி, சிசி டிவி கேம்ரா பொருத்துதல் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்படுகின்றன என்றும், கடந்த 2019-2020-ம் ஆண்டில் 38 பயிற்சிகளின் மூலம் 1072 நபர்களுக்கு திறன் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டன என்றும் மேலும் இப்பயிற்சி மையம் மூலமாக பயிற்சி பெறுவோர்க்கு கடன் உதவி தர வங்கிகள் முன் வர கேட்டுக்கொள்ளபட்டது.

இவ்வாறு தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மகளிர் திட்ட இயக்குனர் திரு.எஸ். தேவநாதன், முன்னோடி வங்கி மேலாளர் திரு.அருள், மாவட்ட தொழில் மைய மேலாளர் செந்தில் ராஜா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மேலாளர் சந்தான ராஜ், நபார்டு வங்கி மாவட்ட மேலாளர் நவின் குமார், ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குனர் ஜெ.அகல்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *