செய்திகள்

75-வது சுந்தந்திர தின விழா: பெருங்கூட்டங்களை தவிர்க்க மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

புதுடெல்லி, ஆக. 12–

75வது சுதந்திர தின கொண்டாட்டங்களில் பெரும் கூட்டங்களை தவிர்க்க வேண்டும் என மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

நாடு சுதந்திரம் அடைந்த 75வது ஆண்டுவிழா வரும் ஆகஸ்ட் 15–ந்தேதி கொண்டாடப்படவுள்ளது. இது 75வது சுதந்திரம் தினம் என்பதால் இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்தே விடுதலையின் அமுதப் பெருவிழா என்ற பெயரில் எல்லா துறைகள் சார்ந்தும் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.

நாட்டில் அன்றாடம் குறைந்தது 15 ஆயிரம் பேருக்காவது புதிதாக கொரோனா தொற்று உறுதியாகிறது. இந்நிலையில் சுதந்திர தின விழாவில் பெருங் கூட்டங்களை தவிர்க்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், சுதந்திர தின விழாவில் பெருங்கூட்டங்களைத் தவிர்க்க வேண்டும், அனைவரும் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தூய்மை இந்தியா திட்டத்தினை மாவட்டங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.