செய்திகள்

75 % தடுப்பூசிகளை எடுத்துக்கொண்ட 10 நாடுகள்:உலக சுகாதார அமைப்பு வேதனை

சென்னை, ஜூலை 23–

உலகிலுள்ள தடுப்பூசிகளை 75 சதவீதத்தை, 10 நாடுகள் மட்டுமே எடுத்துக்கொண்டுள்ளது என்று, உலக சுகாதார நிறுவனம் வேதனையை வெளிப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனோம் கூறும்போது, “கொரோனா பாதிப்பு புள்ளி விவரத்தின் மூலம், ஒலிம்பிக் போட்டியில் வைரஸ் பாதிப்பை குறைத்து மதிப்பிட முடியாது. விளையாட்டு வீரர்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை விரைவாக அடையாளம் கண்டு, தனிமைப்படுத்த வேண்டும். இதன்மூலம் நோய் பரவலைக் கட்டுப்படுத்தலாம் என்றார்.

10 நாடுகளே எடுத்துக்கொண்டது

மேலும் கூறும்போது, உலகில் வழங்கப்பட்ட தடுப்பூசியில் 75 சதவிகிதத்தை, 10 நாடுகள் மட்டுமே பங்கு போட்டுக் கொண்டுள்ளன. உலகின் பல்வேறு பகுதிகளில் தற்போது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனாவின் டெல்டா மாறுபாட்டை விட, அதிக பரவல் கொண்டதும், ஆபத்து நிறைந்ததுமான மற்றுமொரு மாறுபாட்டை மனிதகுலம் விரைவில் பார்க்கக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.

ஒலிம்பிக்கில் பங்கேற்க டோக்கியோ வந்திருக்கும் வீரர், வீராங்கனை குழுவைச் சேர்ந்தவர்களில் நேற்று மேலும் 10 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதன் மூலம் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது என போட்டி அமைப்பு குழுவினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *